(3860)
எவைகோலணுகப்பெறுநா ளென்றப்போதும்
கலைபில்மனமின்றிக் கண்ணீர்கள்கலுழ்வன்
நவையில் திநாரணன்சேர் திருநாவாய்
அவையுள்புகலாவதோர் நாளறியேனே.
பதவுரை
|
அணுக பெறுநாள் எவை கொள்ல என்று |
– |
கிட்டப்பெறும் நான் எந்நாளோ வென்று |
|
எப்போதும் |
– |
எக்காலத்திலும் |
|
சுவையில் மனம் இன்றி |
– |
இரட்டைப்பட்ட நெஞ்சின்றிக்கே ஏகாக்ரசித் தனாய் கொண்டு |
|
கண் நீர்கள் கலுழ்வன் |
– |
கண்ணநீர் பெருவெள்ளம் நிற்பேன் |
|
நவை இல் திரு நாரணன் சேர் |
– |
ஹேயப்ரத்யநீகளான திருமால் வர்த்திக்கிற |
|
திருநாவாய் அவையுள் |
– |
திருநாவாய்ப்பதியில் திருவோலக்கத்திலே |
|
புகல் ஆவது ஓர் நாள் அறியேன் |
– |
சென்று சேர்வதற்கீடான வொரு நானை அறிகின்றிலேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***– திருநாவாயில் மஹா கோஷ்டியிலே சென்று சேர்ந்து அநுபவிக்கும் நாள் எதுவோ? அறிகிறிலேன் என்று அலமருகின்றார். நான் வந்து கிட்டப்பெறும் நாள் எதுவோ வென்று இதையே எப்போதுஞ் சொல்லிக் கண்ணீர் சோரவிருக்கின்றேன். துர்லபத்வம் முதலான தோஷங்களின்றிக்கே திருநாவாயிலே வந்து ஸீலப்னான ஸ்ரீமந் நாராயணன் அங்குப் பெரிய திருவோலக்கமாக இருக்க அத்திரளிலேசென்று கூடப்பெறாமலிக்க என்னாலாகுமோ? அடியார்கள் குழாங்களை யுடன் கூடுவதென்று கொலோ என்று ஆசைப்பட்ட நான் அத்திரளிலே சென்று கூடப் பெறாதிருப்பது தருமோ? என்றாராயிற்று.
(கவையில் மனமின்றி) கவையிலேயோன மன மின்றிக்கே–இருதலைப்பட்ட நெஞ்சின்றிக்கே யென்றபடி. ஏகாதரசித்தனாய் கொண்டு என்பது தாற்பரியம். இரட்டைப்பட்டிருப்பதற்குச் சுவை யென்று பெயர்; “சுவை நாவரவினனைப் பள்ளியின்மேல்” என்றார் திருமங்கையாழ்வாரும். கலுழ்வன்–வெள்ளமிட நிற்பேன் என்றபடி.
English Translation
I weep with thoughts of nothing except when I will reach him in Tirunavai where he resides in good company perfectly
