(3861)
நாளேலறியேன் எனக்குள்ளநானும்
மீளாவடிமைப் பணிசெய்யப்புகுந்தேன்
நீளார்மலர்ச்சோலைகள்சூழ் திருநாவாய்
வாளேய்தடங்கண் மடப்பின்னைமணாளா.
பதவுரை
|
நீள் ஆர் மலர் சோலைகள் சூழ் திருநாவாய் |
– |
ஓங்கி நிறைந்த பூக்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருநாவாயிலே (எழுந்தருளியிருக்கிற) |
|
வாள் ஏய் தட கண் |
– |
வாள் போன்ற பெரிய கண்களையுடையளாய் |
|
மட பின்னை மணாளா |
– |
நப்பின்னைப் பிராட்டிக்கு வல்லபனானவனே! |
|
நானும் |
– |
அடியேனும் |
|
மீளா அடிமை பணி செய்ய புகுந்தேன் |
– |
இடையறாத நித்ய கைங்கரியத்திலே நிரதனானேன். |
|
எனக்கு உள்ளன நான் அறியேன் |
– |
அறுக்கு எனக்கு நீ ஸங்கல் பித்துவைத்த நான் அறிகின்றிலேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***– ஆத்மாவுள்ளவரையில் கைங்கரியம் பண்ணும்படி விஷயீகரிக்கப்பெற்ற நான் திருநாவாயில் நம்பின்னைப் பிராட்டியோடே கூடவிருக்கிற இருப்பிலே அடிமை செய்ப்பெறும் நாள் என்றோ! அறிகிலேன் என்கிறார். நாளேலயியே னெனக்குள்ளன=நாள் பிநிந்து துக்கப்பட வேண்டிய நாள் இன்னுமெத்தனை நாளுண்டென்று அறிகின்றிலேன் என்றும், அனுபவிக்கப் பெறும் நாள் என்னைக்கென்று அறிகின்றிலேன் என்றும் இரண்டு வகையும் பொருள் கொள்ளலாம். நானும் மீளாவடிமைப் பணி செய்யப் புகுந்தேன்=நித்ய ஸுரிகள் பண்ணும் யாவதாத்மபாவியான கைங்கரித்திலேயன்றோ நானும் அந்வயித்திருப்பது. நீளார் மலர்ச்சோலைகள் சூழ் திருநாவாய்= கைங்கரியம் பண்ணுகைக்குப் புஷ்பம் முதலிய உபகரணங்களினால் குறையொன்று மின்றிக்கே யிருக்கிற திவ்ய தேச மென்றபடி. இத்திருவாய்மொழியில் பிராட்டி ஸம்பந்தம் அடிக்கடி அநுஸந்திக்கப்படுகிறது; அதற்குக் காரணமருளிச் செய்கிறார் நம்பிள்ளை–”தேசாந்தரம்போன ப்ரஜை ஊர் அணித்தானவாறே தாய்மாரைப் பலகால் நினைக்குமாபோலே, ப்ராப்யதேசம் அணித்தானவாறே திரளவும் தனித்தனியும் பிராட்டிமாரை யநுஸந்திக்கிறார்” என்று.
English Translation
O Lord of Vel-eyed Nappinnai in Tirunavai amid groves! I know not how long I must stay here doing deeds of no return
