(3859)

(3859)

கொடியேரிடைக் கோகனத்தவள்கேள்வன்

வடிவேல்தடங்கண் மடப்பின்னைமணாளன்

நெடியானுறைசோலைகள் சூழ் திருநாவாய்

அடியேனணுகப்பெறுநாள் எவைகொவோ.

 

பதவுரை

கொடி ஏர் இடை

கொடிபோலாகிய இடையையுடையனாய்

கோகனகத்தவன்

தாமரையாளான பிராட்டிக்கு

கேள்வன்

வல்லபனாய்

வடிவேல் தட கண் மட பின்னை மணாளன்

உரிய வேல் போன்ற பெரிய எண்களை யுடைய அழகிய கப்பின்னைப் பிராட்டிக்கு மணவாளனாய்

நெடியான்

மஹா புருஷனானவன்

உறை

நித்யவாஸம்பண்ணுகிற

சோலைகள் சூழ் திருநாவாய்

சோலைகளாலேசூழப்பட்ட திருநாவாயை

அடியேன் அணுக பெறும் நாள் எவை கொல்

அடியேன் கிட்டப்பெறுவது என்னைக்கோ

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***– பெரிய பிராட்டியாரோடும் நப்பின்னைப் பிராட்டியாரோடுங் கூட அவன் எழுந்தருளியிருக்கிற திருநாவாயிலே போய்ப்புகுவது என்றைக்கோ வென்கிறார்.  கொடி போன்றழகிய இடையை யுடையளாய், தாமரைப் பூவிற் பரிமளம் உபாதானமாகப் பிறந்தவனான பிராட்டிக்கு வல்லபன்;  கூரிய வேல் போன்றழகிய கண்ணையுடையளான நப்பிள்ளைப் பிராட்டிக்கு மணவாளன்.  இவ்விரண்டு விசேஷணங்களின் கருத்து–புருஷகாரம் செய்து சேர்ப்பிக்கவல்லவர்கள் அருகேயிருக்கச் செய்தேயும் நான் இழக்கலாமோ என்பதாம்.

 

English Translation

The Lord in Tirunavai is spouse of lotus-dame Lakshmi, and Vel-eyed slender Nappinnai.  Oh! When will I attain him?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top