(3636)
நிற்றிமுற் றத்துள் என் றுநெரித் தகைய ராயென்னைநீர்
சுற்றியும் சூழ்ந்தும் வைதிர்சுடர்ச் சோதி மணிநிறமாய்,
முற்றவிம் மூவுல கும்விரி கின்ற சுடர்முடிக்கே,
ஒற்றுமைக் கொண்டதுள் ளமன்னை மீர்! நசை யென்நுங்கட்கே?
பதவுரை
|
அன்னை மீர் |
– |
தாய்மார்களே! |
|
நீர் |
– |
நீங்கள் |
|
என்னை |
– |
என்னைக் குறித்து |
|
முற்றத்துள் |
– |
(பெண்ணே!) கூசாமல் முற்றத்திலே வந்து நிற்கிறாயே! என்று அதட்டி |
|
நேரித்த கையர் ஆய் சுற்றியும் சூழந்தும் |
– |
கையை நேரித்துக் கொண்டு |
|
வைதிர் |
– |
நிந்திக்கின்றீர்கள்; |
|
சுடர் சோதி மணி நிறம் ஆய் |
– |
சுடராய்ப் பரம்பின வொளியையுடைத்தான ரத்னங்களினுடைய நிறத்தை யுடைத்தாய்க் கொண்டு |
|
இம் மூவுலகு முற்றவும் விரிகின்ற |
– |
உலகமடங்கலும் வியாபிக்கிற |
|
சுடர் |
– |
தேஜஸ்ஸையுடைத்தான |
|
முடிக்கே |
– |
திருவபிஷேகத்தின் பக்கலிலேயே |
|
உள்ளம் ஒற்றுமை கொண்டது |
– |
எனது நெஞ்சானது ஒருமைப்பட்டது; |
|
நுங்கட்கு நசை என் |
– |
இனி உங்களுக்கு என் பக்கலில் ஆசை வீண்தான். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (நிற்றி முற்றத்துள்) திருவபிஷேகத்தினழக்கிலே என்னுற்றமகப்பட்டது இனியென்னைப் பொடிந்து உங்களுக்கொரு பலனில்லையென்று திண்ணிதாகப் பேசித் தலைக்கட்டுகிறாள். இப்படி வெட்டிதாகச் சொல்லாவிடில் அவர்கள் விடார்கள் போலேயிருந்து; ஆகவே வெட்டொன்று துண்டிரண்டாகச் சொல்லி முடிக்கிறாள்.
முற்றத்தூடு புகுந்து நின்முகங்காட்டிப் புன்முறுவல செய்த என்றும் முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர் என்றும் சொல்லுகிறபடியே எம்பெருமான் முற்றத்திலே வன்து (மறுவல் செய்து நிற்கிற வழக்கமுண்டாகையாலே அதிலாசை கொண்டு பராங்குச நாயகி முற்றத்திலே வந்து நின்றாள்போலும்; அதுகண்ட அன்னைமார் “அந்தோ! இப்படியும் ஒரு துணிவுண்டோ? நாண்மடச்சங் கொண்டு பதுங்கியடங்கி யிருக்கவேண்டிய சிறுக்கி வெட்கமின்றி வெளிப்புறப்பட்டு முற்றத்திலே வந்து நிற்கையாவதென்?;” என்று கை நேரித்து வைதார்களாம்; இப்போது இப்படிப்பட்டட வசவுகளுக்கு இறையும பயனில்லை போமின் என்கிறாளாயிற்று. கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்த நீண் முடியிலே எனது நெஞ்சு ஐக்கியப்பட்டதானபின்பு என்னை மீட்கையிலே உங்களுக்குண்டான நசை ஊமனார் கண்ட கனவிலும் பழுதா மத்தனையென்று தலைக்கட்டினாள்.
English Translation
Ladies, you stand around me with rough hands and abuse me for standing in the porch. My heart is set on the gem-hued Lord whose radiance is spread everywhere; what do you want of me?
