(3637)
கட்கரி யபிர மஞ்சிவன் இந்திரன் என்றிவர்க்கும்,
கட்கரி யகண்ண னைக்குரு கூர்ச்சடகோபன் சொன்ன,
உட்குடை யாயிரத் தூளிவை யுமொரு பத்தும்வல்லார்,
உட்குடை வானவ ரோடுட னாயென்றும் மாயாரே.
பதவுரை
|
கட்கு அரிய |
– |
மனிதா முதலானாருடைய கண்ணுக்க இலக்காகாத |
|
பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கு |
– |
பிரமன் சிவன் இந்திரன் என்று சொல்லிப் பட்ட இவர்களுடைய |
|
கட்கும் அரிய |
– |
கண்ணுக்கும் காணவர்யனான |
|
கண்ணனை |
– |
எம்பெருமானைக் குறித்து |
|
குருகூர்சட கோபன் சொன்ன |
– |
நம்மாழ்வார் அருளிச்செய்த |
|
உட்கு உடை ஆயிரத்துள் |
– |
எம்பெருமானை உள்ளபடி பேசும் வல்லமை வாய்ந்த ஆயிரத்தினுள்ளே |
|
இவையும் ஒரு பத்தும் வல்லார் |
– |
இப்பத்துப் பாசுரங்களையும் ஓதவல்லவர்கள் |
|
உட்கு உடை வானவரோடு உடன் ஆய் என்றும் |
– |
ஆற்றல்மிக்க நித்ய ஸூரிகளோடு கூடியவர்களாய் |
|
மாயார் |
– |
ஒரு நாளும் பிரியாதிருக்கப் பெறுவர்கள் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
(கட்கரிய பிரமன்.) இத்திருவாய்மொழியை ஓதுமவர்கள் எம்பெருமானைப் பிரிந்து வருந்தாதே நித்யஸூரிகளோடே கூடி நித்யாதுபவம் பண்ணப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். “மனிசர்க்குத் தேவர்போலத் தேவர்க்குந் தேவாவோ” என்றருளிச் செய்த பாசுரத்தின் படியே இதில் ஒன்றரையடிகள் அமைந்திருக்கின்றன. பிரமன் சிவனிந்திரன் முதலானோர் நம்முடைய கட்புனுக்கு இலக்காகாதாப்போலே அவர்களுடைய கட்புலனுக்கு இலக்காகாதவன் எம்பெருமான்; அவன்றன்னைக் குறித்து ஆழ்வாரருளிச் செய்தவாயிரம்.
உட்கு உடை ஆயிரம்-உட்கு-சக்தி; எம்பெருமானுடைய ஸ்வரூப ரூபகுணவிபூதி சேஷ்டிதங்களை உள்ளபடியே யுரைக்கவல்ல சக்தி வாய்ந்த ஆயிரம் என்றபடி. மேலே, உடகுடை வானவர்-எம்பெருமானை இடை வீடின்றி அனுபவிக்க வல்ல சக்தியுடையார் என்க.
English Translation
This decad of the powerful thousand songs. By kurugur Satakopan on Krishna who is hard to see for even the celestials, -those who master it will secure the world of the celestials forever
