(3632)
உய்விடம் ஏழையர்க் கும் அசுரர்க்கும் அரக்கர்கட்கும்
எவ்விடம்? என்றிலங் கிமகரம் தழைக் கும்தளிர்கொல்,
பைவிடப் பாம்பணை யான் திருக்குண்டலக் காதுகளே?
கைவிட லொன்றுமின் றிய் அடுகின்றன காண்மின்களே.
பதவுரை
|
ஏழையாக்கும் |
– |
பெண்டுகளுக்கும் |
|
அசுரர்க்கும் அரக்கர் கட்கும் |
– |
அஸூர ராக்ஷஸர்களுக்கும் |
|
உய்வு இடம் எவ்விடம் என்று இலங்கி |
– |
பிழைக்கும் வரது ஏது? என்னும்படி விளங்கிக் கொண்டு |
|
மகரம் தழைக்கும் தளிர்கொல் |
– |
மகரவடிவமாய்த் தழைத்த சில தளிர்களோ? |
|
பை விடம் பாம்பு அணையான் |
– |
படமெடுப்பதும் விஷத்தைக்குவதுமான பாம்பைக் படுக்கை யாகவுடைய பெருமானுடைய |
|
திரு குண்டலம் |
– |
திருமகர குண்டலங்களை யுடைய காதுகள் தானே |
|
கைவிடல் ஒன்றும் இன்றி |
– |
ஒய்வில்லாமல் நிரந்தரமாக |
|
அடுகின்றன |
– |
நலியாநின்றன; |
|
காண்மின்கள் |
– |
காணுகோள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (உய்விடமேழையர்க்கும்.) அவனுடைய திருமகரகுண்டலங்களும் திருக்காதுகளும் நலிகிறபடி சொல்லுகிறாள். அஸூர ராக்ஷஸர்களுக்கும் அபலைகளுக்கும் தப்பிச்சென்று பிழைக்கு மிடமேது! என்று சொல்லுவானபோல் விளங்கி மகராகராமாய்த் தழைத்தன சில தளிர்களோ இவை! என்கிற உல்லேகம் முன்னடிகளிற் போதரும். இதனால் திருக்காதுகள் பல்லவம்போல் திகழுமாறு சொல்லிற்றாயிற்று.
ஏழையர்க்கும் அசுரர்க்கும் – அஸூரராக்ஷ்ஸர்களையும் அபலைகளையும் சேரவெடுத்து அவயவசோபையைக் கண்டு பாதைப்படுவதில் வாசியற்றிருக்கையாலே. அசுரரும் அரக்கரும் அழகுகண்டால் பொறுக்கமாட்டாத முடிவர்கள்; அபலைகள் அநுபவிக்கப் பெறாதே முடிவர்கள்
விரோதிகளுக்குக் கிட்ட வொண்ணாதபடி விஷத்தை உழிழ்பவானான திருவனந்தாழ்வான்மேல் சாய்ந்தருளின எம்பெருமானுடைய குண்டலக் காதுகளே இவை. அந்தோ! இவை இடையில் சிறிது விட்டு நலிகையன்றிக்கே ஓய்வின்றி நலிகின்றனவே! என் செய்வேனென்கிறாள்.
English Translation
Are they springs dangling with Makara fish?, -that make damsels and Asuras fear and ask, “Where?”, -O Ladies, See! The ornamented ears of the Lord who sleeps on a hooded snake kill me relentlessly
