(3613)

(3613)

மாயம் அறிபவர் மாயவற் காளன்றி யாவரோ,

தாயம் செறுமொரு நூற்றுவர் மங்கவோ ரைவர்க்காய்,

தேச மறியவோர் சாரதி யாய்ச்சென்று சேனையை

நாசம்செய் திட்டு, நடந்தநல் வார்த்தை யறிந்துமே?

 

பதவுரை

தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க

தாயாதி முறையில் சண்டை செய்து கிளர்ந்ததுர்யோதநாதிகள் தொலைய

ஓர்  ஐவர்க்கு ஆய்

விலக்ஷ்ணர்களான பஞ்சபாண்டவர்களுக்காகி

தேசம் அறிய

ஸகலலோக ப்ரஸித்த மாம்படி

ஓர் சாரதி ஆய் சென்று

ஒப்பற்ற ஸாரதியாகப் போய்

சேனையை நாசம் செய்திட்டு

எல்லாம் சேனைகளையும் அழியச்செய்து

நடந்தநல்வார்த்தை அறிந்தும்

தன்னடிச் சோதிக் கெழுந்தருளினானென்கிற  நல்வார்த்தையை யறிந்தும்

மாயம் அறிபவர்

மிகவும் ஆச்சரியமான பகவத் கதைகளை யறியுமவர்கள்

மாயவற்கு அன்றி ஆள் ஆவரோ

அப்பெருமானுக்கல்லது மற்றொருவர்க்கு அடிமையாவரோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பஞ்சபாண்டவர்களுக்குக் கையாளாயிருந்து இழிதொழில் செய்து பார்த்தஸாரதி யென்று பேர்பெற்றுத் தாழநின்று அநிஷ்டவர்க்கங்களை அகற்றின மஹாகுணத்தைப் பேசுகிறார்.

தாயம் செறும்-தாயப்ராப்தியாலே செறுகிற என்ற டி பங்காளிமுறையாலே சண்டை செய்தமையைச் சொன்னபடி.

தேசமறிய வோர்சாரதியாய்ச் சென்று-இற்றைக்கும் அர்ச்சாவதாரத்திலுங் கூட அனைவரு மறிந்துகொள்ளுமாறு பார்த்தசாரதி யென்று பேர்பெற்று நிற்கிறானன்றோ. தேசமறிய என்றவிடத்து நம்பிள்ளை யருளிச் செய்வது காணீர்; “நாட்டில் ஸ்வாதந்த்ர்ய பாரதந்த்ர்யங்கள் வ்யவஸ்திதமானவிடத்திலும் ரஹஸ்யத்திலேயிறே அவை ப்ரயோகிப்பது. பர்த்தாவும் பார்யையைக் காலைப்பிடிப்பது ரஹஸயத்திலேயிறே. இப்படி யிருக்கச் செய்தேயிறே ஜகத்ப்ரஸித்தமாம்படி தன்னைத் தாழவிட்டது”

நடந்த—திருநாடேற வெழுந்தருளின என்றபடி. க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா: ப்ருதுலோசந மோஹயித்வா ஜகத்ஸர்வம் கத: ஸ்வம் ஸ்த்தாந முத்தமம் என்ற மஹாபாரத ச்லோகம் இங்கே யநுஸந்திப்பது.

 

English Translation

The Lord drove a chariot, destroying the hundred who cheated in dice, securing victory for the good five, in a battle that the world spoke about, knowing this, will anyone seek and but the Lord?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top