(3612)

(3612)

செல்ல வுணர்ந்தவர் செல்வன்றன் சீரன்றிக் கற்பரோ,

எல்லை யிலாத பெருந்தவத் தால்பல செய்மிறை,

அல்லல் அமரரைச் செய்யும் இரணிய னாகத்தை,

மல்லல் அரியுரு வாய்ச்செய்த மாயம் அறிந்துமே?

 

பதவுரை

எல்லை இலாத பெரு தவத்தால்

அபரிமதமான மஹாத பஸ்ஸீக்களாலே

பல செய் மிறை

பலவகையாகச் செய்யப்ப பட்டலோகபீடையை யுடையனாய்

அமரரை அல்லல் செய்யும்

(விசேக்ஷித்து) தேவர்களுக்குத் துன்பங்களை யுண்டுபண்ணினவனான

இரணியன் ஆகத்தை

ஹிரண்யாஸீரனுடைய உடலை,

மல்லல் அரி உரு ஆய் செய்த

பெரிய நரசிங்க வடிவையுடைனாய்க் கொண்டு இருபிளவாகச் செய்த

மாயம் அறிந்தும்

ஆச்சரியத்தை யறிந்து வைத்தும்

செல்ல உணர்ந்துவர்

பூர்த்தியான ஞானத்தைப் பெற்றவர்கள்

செல்வன் தன் சீர் அன்றி கற்பரோ

லக்ஷ்மீபதியான அப்பெருமானுடைய திருக்குணங்களையன்றி வேறென்றைக் கற்பரோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றி ஆச்ரிதரக்ஷ்ணம் பண்ணின மஹாகுணத்தைப் பேசுகிறாரிதில். செல்லவுணர்ந்தவர் என்றது—உணர்ச்சி எவ்வளவு தூரம் செல்லாமோ அவ்வளவும் செல்ல விவேகிக்கவல்லவர்கள் என்றபடி. ஜச்வர்ய கைவல்யங்களில் மாத்திரம் நின்றுவிடாதே எல்லே நிலமான பகவதநுபவம் வரையிலும் உணர்ச்சியைச் செல்லவிட்டவர்கள் என்றபடி. அன்னவர்கள் திருவுக்குந்திருவாகிய செல்வானுடைய சீர்களையேயன்றோ கற்பார். இப்போது தாம் விவக்ஷித்த சீர் இன்னதென்கிறது மேல் மூன்றடிகளில். அளவிறந்த தபஸ்ஸீக்களைச் செய்து அதனால் அபரிமிதமான வரங்களைப் பெற்று. அப்படி வரங்கொடுத்த தெய்வங்களையும் கண்ணீர்பாயவிட்ட இரணியனது உடலே, பெரியவடிவுகொண்ட நரஸிம்ஹ மூர்த்தியாய்த் தோன்றிப் பிளந்த ஆச்சரியத்தை யறிந்துவைத்தும் அந்த ஆச்ரிதவாத்ஸல்ய குணத்தையல்லது வேறொன்றைக் கற்பரோ?

மல்லல்-பெருமை; ”அபரிமிதபரிமாண ந்ருஸிம்ஹரூவதரனாய்க் கொண்டு” என்பது ஆறாயிரப்படி. “மஹாவிஷ்ணும் என்னும்படியே ஹிரண்யன் குளப்படியாம்படியாகப் [ குளப்படி= குளம்பு அடி. குரமாத்ரமென்றபடி] பெரிய வடிவைக்கொண்டு” என்பது ஈடு.

செய்தமாயம்-நரஸிம்ஹதநு ரகௌணீ ஸமஸமய ஸ்முத்பவச்ச பக்தகிரஸ்தம்பே ச ஸம்பவஸ்தே என்று ஆழ்வான் காட்டின மாயங்கள்

 

English Translation

The Asura king Hiranya with the power of his penance afflicted the gods.  The Lord then came as a man-lion and showed his wonder.   Knowing this, will knowers learn any other than the Lord’s names?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top