(3613)
மாயம் அறிபவர் மாயவற் காளன்றி யாவரோ,
தாயம் செறுமொரு நூற்றுவர் மங்கவோ ரைவர்க்காய்,
தேச மறியவோர் சாரதி யாய்ச்சென்று சேனையை
நாசம்செய் திட்டு, நடந்தநல் வார்த்தை யறிந்துமே?
பதவுரை
|
தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க |
– |
தாயாதி முறையில் சண்டை செய்து கிளர்ந்ததுர்யோதநாதிகள் தொலைய |
|
ஓர் ஐவர்க்கு ஆய் |
– |
விலக்ஷ்ணர்களான பஞ்சபாண்டவர்களுக்காகி |
|
தேசம் அறிய |
– |
ஸகலலோக ப்ரஸித்த மாம்படி |
|
ஓர் சாரதி ஆய் சென்று |
– |
ஒப்பற்ற ஸாரதியாகப் போய் |
|
சேனையை நாசம் செய்திட்டு |
– |
எல்லாம் சேனைகளையும் அழியச்செய்து |
|
நடந்தநல்வார்த்தை அறிந்தும் |
– |
தன்னடிச் சோதிக் கெழுந்தருளினானென்கிற நல்வார்த்தையை யறிந்தும் |
|
மாயம் அறிபவர் |
– |
மிகவும் ஆச்சரியமான பகவத் கதைகளை யறியுமவர்கள் |
|
மாயவற்கு அன்றி ஆள் ஆவரோ |
– |
அப்பெருமானுக்கல்லது மற்றொருவர்க்கு அடிமையாவரோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பஞ்சபாண்டவர்களுக்குக் கையாளாயிருந்து இழிதொழில் செய்து பார்த்தஸாரதி யென்று பேர்பெற்றுத் தாழநின்று அநிஷ்டவர்க்கங்களை அகற்றின மஹாகுணத்தைப் பேசுகிறார்.
தாயம் செறும்-தாயப்ராப்தியாலே செறுகிற என்ற டி பங்காளிமுறையாலே சண்டை செய்தமையைச் சொன்னபடி.
தேசமறிய வோர்சாரதியாய்ச் சென்று-இற்றைக்கும் அர்ச்சாவதாரத்திலுங் கூட அனைவரு மறிந்துகொள்ளுமாறு பார்த்தசாரதி யென்று பேர்பெற்று நிற்கிறானன்றோ. தேசமறிய என்றவிடத்து நம்பிள்ளை யருளிச் செய்வது காணீர்; “நாட்டில் ஸ்வாதந்த்ர்ய பாரதந்த்ர்யங்கள் வ்யவஸ்திதமானவிடத்திலும் ரஹஸ்யத்திலேயிறே அவை ப்ரயோகிப்பது. பர்த்தாவும் பார்யையைக் காலைப்பிடிப்பது ரஹஸயத்திலேயிறே. இப்படி யிருக்கச் செய்தேயிறே ஜகத்ப்ரஸித்தமாம்படி தன்னைத் தாழவிட்டது”
நடந்த—திருநாடேற வெழுந்தருளின என்றபடி. க்ருத்வா பாராவதரணம் ப்ருதிவ்யா: ப்ருதுலோசந மோஹயித்வா ஜகத்ஸர்வம் கத: ஸ்வம் ஸ்த்தாந முத்தமம் என்ற மஹாபாரத ச்லோகம் இங்கே யநுஸந்திப்பது.
English Translation
The Lord drove a chariot, destroying the hundred who cheated in dice, securing victory for the good five, in a battle that the world spoke about, knowing this, will anyone seek and but the Lord?
