(3478)
மூவுலகங் களுமாய் அல்லனாயுகப் பாய்முனிவாய்,
பூவில்வாழ் மகளாய்த் தவ்வையாய்ப்பு ழாய்பழியாய்,
தேவர்மே வித்தெழும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
பாவியேன் மனத்தே யுறைகின்ற பரஞ்சுடரே.
பதவுரை
| மூ உலகங்களும் ஆய் |
– |
(ஆக்குவதற்கும் அழப்பதற்கும் நிலமான) மூன்று லோகங்களாயும் |
| அல்லன் ஆய் |
– |
(அங்ஙனல்லாத) நித்ய விபூதியாய் |
| உகப்பு ஆய் முனிவு ஆய |
– |
ராகத்வேஷங்களாயும் |
| பூவில் வாழ் மகள் ஆய் |
– |
ஸ்ரீ மஹாலக்ஷ்மியாயும் |
| தௌவை ஆய் |
– |
மூதேவி யென்கிற அலக்ஷ்மியாயும் |
| புகழ் ஆய் பழி ஆய் |
– |
கீர்த்தியாயும் அபகீர்த்தியாயும் இருந்துகொண்டு |
| தேவர் மேவி தொழும் திரு விண்ணகர் சேர்ந்த பிரான் |
– |
தேவர்கள் விரும்பித்தொழுமிடமான திருவிண்ணகரில் உறையும் பெருமான் |
| பாவியேன் மனத்தே |
– |
பாவியான என்னுடைய மனத்திலே |
| உறைகின்ற |
– |
நித்யவாஸம்பண்ணுகின்ற |
| பரம் சுடர் |
– |
பரஞ்சோதியாவன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (மூவுலகங்களுமாய்) படைக்கப்படுதல், கருமங்களுக்கு வசப்பட்டிருத்தல், ஸத்வரஜ ஸ்தமோ குணமயமாயிருத்தல் என்கிற இவற்றாலே அவிலக்ஷணமாயிருக்கும் மூன்று லோகங்கள், இத்தன்மைகளுக்கு எதிர்த்தட்டாய்ப் பரமவிலக்ஷணமாயிருக்கும் நித்யவிபூதி, இவையெல்லாம் இவனிட்ட வழக்கென்றது. உகப்பாய் முனிவாய் – ஒரு வஸ்துவை ஒருவர் உகந்திருப்பதும், அதுதன்னையே மற்றொருவர் வெறுத்திருப்பதுமான உகப்பும் முனிவும் அவனிட்டவழக்கு ஒருவனுக்கு ஒன்றில் ஒருகால் உகப்பும் அவனுக்கே அதுதன்னிலேயே மற்றொரு கால் வெறுப்புமாதலால் அவையு மிங்குக் கொள்ளலாம்.
பூவில்வாழ்மகளாய்த் தௌவையாய் – லக்ஷ்மீகடாக்ஷம் பெறுவானொருத்தன், மூதேவிபிடித்துத் திரிவானொருத்தன், இவை யிரண்டும் அவனதீனம். * நாட்டினான் தெய்வமெங்கும் நல்லதோர்ருள்தன்னாலே, காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும்வண்ணம், கேட்டிரே நம்பிமீர்காள் கெருடவாகன்னும்நிற்கச் சேட்டைதம்மடியகத்துச் செல்வம்பார்த்திருக்கின்றீரே, * என்கிற திருமாலையின்படியே சிலர் திருமாலைத்தொழுது உய்வதும் சிலர் தேவதாந்தர பஜனம்பண்ணி அநர்த்தப்பட்டுப் போவதும் அவனிட்ட மாயை என்றவாறு.
புகழாய் பழியாய் – * தோன்றில் புகழொடு தோன்றுக, அஃதிலார் தோன்றலில் தோன்றாமை நன்று * (குறள்) என்னும்படியான உலகம்நிறைந்த புகழோடு விளங்குதலும் பலவகைப்பட்ட அபகீர்த்திகளுக்குக் கொள்கலமாயிருத்தலும் அவனதீனம். பக்தர்களால் புகழப்பெறுவதும் சிசுபாலாதிகளால் * கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப்பெற்றான் காடுவாழ்சாதியுமாகப்பெற்றான் பற்றியுரலிடையாப்புமுண்டான் * என்றிப்புடைகளிலே பழிக்கப் பெறுவதுமான தன்மைகளைச் சொல்லிற்றாகவுமாம்.
ஆகவிப்படி விருத்த விபூதியுக்தனாப்கொண்டு திருவிண்ணகரிலே திகழும் பெருமான் அந்தத் திருவிண்ணகரைப்போலே என் மனத்தையும் ஆதரித்து இங்கே உறைந்து இத்தால் புகர்பெற்று நிற்பவன் கிடிகோள் என்கிறார். கீழ் * மின்னிடை மடவாரில் எம்பெருமானைக் கதவடைத்துத்தள்ளித் திரஸ்கரித்த பாவத்தை நினைத்துப் பாவியேன் என்கிறார். இங்கே ஈடு “நித்யஸூரிகள் தன்பக்கலிலே வந்து மெல்லிய அத்தைத்தள்ளித் தான் என் பக்கலிலே வந்து மேல்விழாநிற்கக்கிடீர் நான் அல்லேனென்றது.“
English Translation
As these three worlds and no them, as peace and anger, as the lotus-dame, and the wretched-dame, as praise and terrible blams, -the Lord of Tiru-vinnagar is worshipped by the gods. He is a radiant lotus-form that lives in my heart.
