(3479)
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குபதித்த வுடம்பாய்,
கரந்தும்தோன் றியும்நின்றும் கைதவங்கள் செய்யும்,விண்ணோர்
சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,
வரங்கொள்பாத மல்லாலில்லை யாவர்க்கும் வன்சரணே.
பதவுரை
| பரம் சுடர் உடம்பு ஆய் |
– |
அப்ராக்ருத விக்ரஹயுக்தனாயும் |
| அழுக்கு பதித்த உடம்பு ஆய் |
– |
ஹேய ஜகத்ரூப சரீரயுக்தனாயும் |
| கரந்தும் தோன்றியும் நின்றும் |
– |
மறைந்தும் வெளிப்பட்டு மிருந்தும் |
| கைதவங்கள் செய்தும் |
– |
வஞ்சனைகளைச் செய்தும் (இப்படிப்பட்ட தன்மைகள் திகழ) |
| விண்ணோர் சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் |
– |
தேவர்கள் தலைவணங்கித் தொழுமிடமான திருவிண்ணகரிலே உறையும் பெருமாடைய |
| வரம் கொள் பாதம் அல்லால் |
– |
சிறப்புப் பொருந்திய திருவடிகள் தவிர |
| யாவர்க்கும் வன் சரண் இல்லை |
– |
யார்க்கும் வலிதான புகலிடம் வேறில்லை. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (பரஞ்சுடர்) எம்பெருமானுக்கு இரண்டு வகையான சரீரங்களுண்டு அப்ராக்ருதமாய் சுத்தஸத்வமயமான அஸாதாரண திவ்யமங்கள விக்ரஹம் ஒன்று, – ஜகத் ஸர்வம் சரீரம் தே. என்கிறபடியே ஸகல ஜகத்தும் அவனுக்கு சரீரமாகையாலேஇந்த ஸமஸ்த ஹேயாஸ்பத சரீரம் மற்றொன்று.
கரந்தும் தோன்றியும் – * இராமடமூட்டுவாரைப்போலே உள்ளே பதிகிடந்து ஸத்தையே பிடித்து நோக்கிக்கொண்டு போரும் * என்றும், * கண்காணநிற்கில் ஆணையிட்டு விலக்குவர்களென்று கண்ணுக்குத் தோற்றதபடி நின்று * என்றும் (பிள்ளைலோகாசாரயர்) அருளிச்செய்கிறபடியே மறைந்திருப்பதும், * காணவாராயென்றென்ற்று கண்ணும்வாயும் துவர்ந்திருப்பார்க்குக் காணலாம்படி ராமக்ருஷ்ணாதி அவதாரங்களைச் செய்வதும் விவக்ஷிதம். நின்றும் –நூறாண்டு பதினோராயிரமாண்டு நின்றும். கைதவம் – வடசொல், க்ருத்ரிமம் என்றபடி. “அவதரித்து நிற்கச் செய்தே தன்படிகள் சிசுபாலாதிகளுக்குத் தோற்றாதபடி பண்ணியும் ஆச்ரிதர்க்குத் தோற்றும்படி பண்ணியும்“ என்பது ஈடு.
இப்படிப்பட்டவன், பிரமன் தேவர்கள் தலைபடைத்த ப்ரயோஜனம் பெற்றோம் என்று வணங்கும்படி திருவிண்ணகரிலே உறைகின்றான், அவனுடைய திருவடிகளல்லது புகலில்லை.
வரங்கொள் பாதம் – அவரவர்கள் தம்தமக்கு வேண்டிய வரங்களை இரந்து பெற்றுக்கொள்ளும்படியான திருவடிகள். வரம் என்கிற வடசொல் ச்ரேஷ்டம் என்கிற பொருளையுமுடைத்தாதலால் “ச்ரேஷ்டத்தன்மையைக் கொண்டிருக்கிற“ என்னவுமாம். யாவர்க்கும் என்றவிடத்து “எத்தனையேனும் கிழாய்கிழாயர்க்கும்“ என்பது ஈடு, கிழம்கிழமாயுள்ளவர்களுக்கும் – பெருப்பெருத்தவர்களுக்கும் என்றபடி.
வன்சரணே – “பிராட்டியும் அவனும் விடிலும் திருவடிகள்விடாது திண்கழலாயிருக்கும்“ என்ற முமுக்ஷுப்படி ஸ்ரீஸூக்தி அநுஸந்தேயம்.
English Translation
A body of exceeding radiance, a body full of filth, hiding now and coming then, faithful and deceiving, -he resides in Vinnagar worshipped by the gods. Other than his lotus feet, we have no refuge.
