(3308)

(3308)

ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும்,

கூறாளும் தனியுடம்பன் குலங்குலமா அசுரர்களை,

நீறாகும் படியாக நிருமித்துப் படைதொட்ட,

மாறாளன் கவராத மணிமாமை குறைவிலமே.

 

பதவுரை

ஏறு ஆளும் இறையோனும்

விருஷபவாஹனனான சிவபிரானும்

திசைமுகனும்

நான்முகனும்

திருமகளும்

பெரியபிராட்டியாரும்

கூறு ஆளும்

‘இன்னஇடம் இன்னாருடையது’ என்று பங்கிட்டுக் கொண்டு வஸிக்கப்பெற்ற

தனி உடம்பன்

விலக்ஷ்ணமான திருமேனியையுடையவனும்,

அசுரர்களை

அசுரர்களை

குலம் குலம் ஆ

கூட்டங் கூட்டமாக

நீறு ஆகும்படி ஆக

சுடநீறாகி யொழியும்படியாக

நிருமித்து

ஸங்கல்பித்து

(அவ்வளவேயன்றிக்கே)

படை தொட்ட

ஆயதங்கொண்டும் காரியஞ் செய்த

மாறு ஆளன்

எதிர்த்தலையுடையனுமான எம்பெருமான்

கவராத

விரும்பாத

மணி மாமை

அழகிய நிறத்தில்

குறைவு இலம்

அபேஷையுடையோமல்லோம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஏறாளுமிறையோனும்) ஸௌசீல்யமே வடிவெடுத்த எம்பெருமான் விரும்பாத அழகிற நிறம் எனக்கு ஏதுக்கு? என்கிறாள். ஆரம்பிக்கும்போதே “ஏறாளுமிறையோன் கூறாளாந் தனியுடம்பன்” என்றது ஒரு தாமஸ தெய்வத்துக்கு எளிதான திருமேனி எனக்கு அரிவாதே! என்ற வருத்தத்தைக் காட்டுமென்க.  “வேதாத்மா விஹகேச்வர:” என்கிறபடியே வேதஸ்வரூபியான பக்ஷிராஜனை  வாஹநமாகக்கொண்ட எம்பெருமான்முன்னே மூடஜந்துவானவொரு எருதை வாஹநமாகக்கொண்டு திரிகின்ற உருத்திரனும், நான்முகனும், ஸ்ரீ மஹாலக்ஷ்;மியும் ஆகிய இவர்கள் கூறிட்டு ஆளும்படி அத்விதீயமான திருமேனி படைத்த பெருமான் என்றது-அவனுடைய ஸௌசீல்யமென்னும் மஹாகுணத்தை யநுபவித்துப் பேசினபடி.  “சிவனொடு பிரமன் வண்திருமடந்தை சேர்திருவாகம் எம்மாவியீரும்” என்கிறார் மேல் ஒன்பதாம்பத்திலும்.  அங்கு உரைத்ததெல்லாம் இங்கும் அறியத்தக்கது.

குலங்குமா அசுரர்களை நீறாகும்படியாக நிருமித்துப் படைதொட்ட = சீலகுணம் சொல்லிற்றுகீழ்; வீர்யகுணம் சொல்லுகிறது இதனால்.  தான் நினைத்தால் விரோதிவர்க்கங்களைக் கிழங்கறக்களைந்து தொலைப்பதில் ஓர் அருமயுண்டோ? சக்தியுக்தன் உபேக்ஷித்தால் உயிர்தரிக்க வழியுண்டோவென்கை.

நிருமித்து என்றது-ஸங்கல்பித்து என்றபடி.  ஜகத்ஸ்ருஷ்டி முதலிய அரிய பெரிய தொழில்களை யெல்லாம் ஸங்கல்ப மாத்ரத்தாலே செய்து போருகின்றவன் பாகவதவிரோதிகளான அசுரர்களை ஸங்கல்ப மாத்ரத்தாலே தொலைத்திடாமல் படைதொட்டு நீறாக்குகின்றனனாம்; இஃது ஏன்? என்னில்; “ஈச்வரன் அவதரித்துப்; பண்ணின ஆனைத்தொழில்களெல்லாம் பாகவதபசாரம் பொறாமையென்று ஜீயரருளிச்செய்வர்” என்ற ஸ்ரீவசந பூஷண திவ்ய ஸூக்தி அறியத்தக்கது.  இங்கே மணவாளமாமுனிகளின் வியாக்கியான ஸ்ரீஸூக்தி வருமாறு:-“ஸங்கல்பமாத்ரத்தாலே ஸர்வத்தையும் நிர்வஹிக்கவல்ல ஸர்வசக்தியான ஸர்வேச்வரன், தன்னையழியமாறி இதர ஸஜாதீயனாய் அவதரித்துக் கைதொடனாய் நின்று செய்த ஹிரண்யராவணாதி நிரஸநரூபங்களான அதிமாநுஷ சேஷ்டிதங்களெல்லாம் ப்ரஹ்லாதன் மஹர்ஷிகள் தொடக்கமான அவ்வோபாகவத விஷயங்களில் அவ்வவர் பண்ணின அபசாரம் ஸஹியாமையாலே யென்று ஆப்ததமரான நஞ்சீயரருளிச் செய்வரென்கை”

மாறாளன் = ஆச்ரிதர்களின் விரோதிகளைத் தன் விரோதிகளாகக்கொண்டு அவர்களோடு மாறுபட்டிருப்பவன் என்பது பரமதாற்பரியம்.

கவராதமணிமாமை-அப்படிப்பட்ட பெருமான் ஓடிவந்து மேல்விழுந்தாலன்றோ இவ்வழகிய நிறம் எனக்கு உத்யேச்யமாவது; அல்லாதபோது இது எனக்கு ஹேயமேயாகும்.  இந்த நிறமில்லையென்று நான் அழுகிறேனோவென்கை.

குறைவு என்பதற்கு லக்ஷ்ணையால் அபேக்ஷிர்தட என்று பொருளாகும்.  குறைவிலும்-

அபேக்ஷையுடையோமல்லோம்; வேண்டியதில்லை என்றவாறு.

 

English Translation

The offensive well-armed Lord has it all arranged, to destroy the clannish Asuras by the score.  The bull-rider Siva, the four-faced Brahma and the lotus-dame Lakshmi reign on his peerless frame.  If he does not desire my spotless beauty, we have nothing to lose

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top