(3308)
ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும்,
கூறாளும் தனியுடம்பன் குலங்குலமா அசுரர்களை,
நீறாகும் படியாக நிருமித்துப் படைதொட்ட,
மாறாளன் கவராத மணிமாமை குறைவிலமே.
பதவுரை
|
ஏறு ஆளும் இறையோனும் |
– |
விருஷபவாஹனனான சிவபிரானும் |
|
திசைமுகனும் |
– |
நான்முகனும் |
|
திருமகளும் |
– |
பெரியபிராட்டியாரும் |
|
கூறு ஆளும் |
– |
‘இன்னஇடம் இன்னாருடையது’ என்று பங்கிட்டுக் கொண்டு வஸிக்கப்பெற்ற |
|
தனி உடம்பன் |
– |
விலக்ஷ்ணமான திருமேனியையுடையவனும், |
|
அசுரர்களை |
– |
அசுரர்களை |
|
குலம் குலம் ஆ |
– |
கூட்டங் கூட்டமாக |
|
நீறு ஆகும்படி ஆக |
– |
சுடநீறாகி யொழியும்படியாக |
|
நிருமித்து |
– |
ஸங்கல்பித்து |
|
(அவ்வளவேயன்றிக்கே) |
||
|
படை தொட்ட |
– |
ஆயதங்கொண்டும் காரியஞ் செய்த |
|
மாறு ஆளன் |
– |
எதிர்த்தலையுடையனுமான எம்பெருமான் |
|
கவராத |
– |
விரும்பாத |
|
மணி மாமை |
– |
அழகிய நிறத்தில் |
|
குறைவு இலம் |
– |
அபேஷையுடையோமல்லோம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஏறாளுமிறையோனும்) ஸௌசீல்யமே வடிவெடுத்த எம்பெருமான் விரும்பாத அழகிற நிறம் எனக்கு ஏதுக்கு? என்கிறாள். ஆரம்பிக்கும்போதே “ஏறாளுமிறையோன் கூறாளாந் தனியுடம்பன்” என்றது ஒரு தாமஸ தெய்வத்துக்கு எளிதான திருமேனி எனக்கு அரிவாதே! என்ற வருத்தத்தைக் காட்டுமென்க. “வேதாத்மா விஹகேச்வர:” என்கிறபடியே வேதஸ்வரூபியான பக்ஷிராஜனை வாஹநமாகக்கொண்ட எம்பெருமான்முன்னே மூடஜந்துவானவொரு எருதை வாஹநமாகக்கொண்டு திரிகின்ற உருத்திரனும், நான்முகனும், ஸ்ரீ மஹாலக்ஷ்;மியும் ஆகிய இவர்கள் கூறிட்டு ஆளும்படி அத்விதீயமான திருமேனி படைத்த பெருமான் என்றது-அவனுடைய ஸௌசீல்யமென்னும் மஹாகுணத்தை யநுபவித்துப் பேசினபடி. “சிவனொடு பிரமன் வண்திருமடந்தை சேர்திருவாகம் எம்மாவியீரும்” என்கிறார் மேல் ஒன்பதாம்பத்திலும். அங்கு உரைத்ததெல்லாம் இங்கும் அறியத்தக்கது.
குலங்குமா அசுரர்களை நீறாகும்படியாக நிருமித்துப் படைதொட்ட = சீலகுணம் சொல்லிற்றுகீழ்; வீர்யகுணம் சொல்லுகிறது இதனால். தான் நினைத்தால் விரோதிவர்க்கங்களைக் கிழங்கறக்களைந்து தொலைப்பதில் ஓர் அருமயுண்டோ? சக்தியுக்தன் உபேக்ஷித்தால் உயிர்தரிக்க வழியுண்டோவென்கை.
நிருமித்து என்றது-ஸங்கல்பித்து என்றபடி. ஜகத்ஸ்ருஷ்டி முதலிய அரிய பெரிய தொழில்களை யெல்லாம் ஸங்கல்ப மாத்ரத்தாலே செய்து போருகின்றவன் பாகவதவிரோதிகளான அசுரர்களை ஸங்கல்ப மாத்ரத்தாலே தொலைத்திடாமல் படைதொட்டு நீறாக்குகின்றனனாம்; இஃது ஏன்? என்னில்; “ஈச்வரன் அவதரித்துப்; பண்ணின ஆனைத்தொழில்களெல்லாம் பாகவதபசாரம் பொறாமையென்று ஜீயரருளிச்செய்வர்” என்ற ஸ்ரீவசந பூஷண திவ்ய ஸூக்தி அறியத்தக்கது. இங்கே மணவாளமாமுனிகளின் வியாக்கியான ஸ்ரீஸூக்தி வருமாறு:-“ஸங்கல்பமாத்ரத்தாலே ஸர்வத்தையும் நிர்வஹிக்கவல்ல ஸர்வசக்தியான ஸர்வேச்வரன், தன்னையழியமாறி இதர ஸஜாதீயனாய் அவதரித்துக் கைதொடனாய் நின்று செய்த ஹிரண்யராவணாதி நிரஸநரூபங்களான அதிமாநுஷ சேஷ்டிதங்களெல்லாம் ப்ரஹ்லாதன் மஹர்ஷிகள் தொடக்கமான அவ்வோபாகவத விஷயங்களில் அவ்வவர் பண்ணின அபசாரம் ஸஹியாமையாலே யென்று ஆப்ததமரான நஞ்சீயரருளிச் செய்வரென்கை”
மாறாளன் = ஆச்ரிதர்களின் விரோதிகளைத் தன் விரோதிகளாகக்கொண்டு அவர்களோடு மாறுபட்டிருப்பவன் என்பது பரமதாற்பரியம்.
கவராதமணிமாமை-அப்படிப்பட்ட பெருமான் ஓடிவந்து மேல்விழுந்தாலன்றோ இவ்வழகிய நிறம் எனக்கு உத்யேச்யமாவது; அல்லாதபோது இது எனக்கு ஹேயமேயாகும். இந்த நிறமில்லையென்று நான் அழுகிறேனோவென்கை.
குறைவு என்பதற்கு லக்ஷ்ணையால் அபேக்ஷிர்தட என்று பொருளாகும். குறைவிலும்-
அபேக்ஷையுடையோமல்லோம்; வேண்டியதில்லை என்றவாறு.
English Translation
The offensive well-armed Lord has it all arranged, to destroy the clannish Asuras by the score. The bull-rider Siva, the four-faced Brahma and the lotus-dame Lakshmi reign on his peerless frame. If he does not desire my spotless beauty, we have nothing to lose
