(3306)
சக்க ரத்தண் ணலேயென்று தாழ்ந்து கண்ணீர் ததும்ப,
பக்கம் நோக்கி நின்ற லந்தேன் பாவியேன் காண்கின்றிலேன்,
மிக்க ஞான மூர்த்தி யாய வேத விளக்கினை,என்
தக்க ஞானக் கண்க ளாலே கண்டு தழுவுவனே.
பதவுரை
|
சக்கரத்து அண்ணலே என்று |
– |
கையும் சக்கரமுமான அழகைக்காட்டி என்னை ஈடுபடுத்திக்கொண்டவனே! என்று சொல்லி |
|
தாழ்ந்து |
– |
அநுபவம் கிடைக்கப்பெறாத க்லேசத்தையடைந்து |
|
கண்நீர் ததும்ப |
– |
கண்ணீர்மல்க |
|
பக்கம் நோக்கி நின்று |
– |
சுற்றும் பார்த்து நின்று |
|
அலந்தேன் |
– |
தளர்ந்தவனான |
|
பாவியேன் |
– |
பாவியானநான் |
|
காண்கின்றிலேன் |
– |
காணப்பெறுகின்றிலேன்: |
|
(காணக்கிடைக்காதவனை மறந்துவிடலாமென்று பார்த்தாலோ) |
||
|
மிக்க ஞானம் மூர்த்தி ஆய |
– |
மிகுந்த ஞானஸ்வரூபனாய் |
|
வேதம் விளக்கினை |
– |
வேதமாகிற தீபத்தாலே காணப்படும்வனான எம்பெருமானை |
|
என் தக்க |
– |
எனக்கேற்ற |
|
ஞானம் கண்களாலே |
– |
ஞானமாகிற கண்ணாலே |
|
கண்டு தழுவுவனே |
– |
கண்டு தழுவிக் கொண்டேயிருக்கிறேனே! |
|
(எப்படி மறக்கமுடியும்?) |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நம்மிடத்தில் ஒரு கைம்முதலுமில்;லாமையை நோக்கி எம்பெருமான் நமக்குக் காட்சி தர விரும்பாமலிருப்பது யக்தமே; அப்படி அவன் இருக்கும்போது அவனை நாம் மறந்து பிழைக்கலாமன்றோ; அப்படி மறக்கவும் முடியாதபடி அப்பெருமான் மாநஸஜ்ஞானத்திற்கு விஷயமாகிக்கொண்டிருக்கிறானே! இதற்கு என்னபண்ணுவேனென்று கிலேசப்படுகிறார்.
கையுந்திருவாழியுமான அழகைக்காட்டி என்னையீடுபடுத்திக் கொண்டவனே! என்று சொல்லித்தரைப்பட்டுக் கண்களில் நீர் பெருகப்பெற்றேன்; எந்தப் பக்கமாக வருகின்றானோ
வென்று பக்கந்தோறும் நோக்கினேன்; மஹாபாபியாகையாலே காணப்பெற்றிலேன். காணாவிட்டால் மறந்து பிழைக்கலாமே; நெஞ்சில் பிரகாசியாமலிருந்தாலன்றோ மறக்கலாம்; பரிபூர்ணமான ஞானத்தையே வடிவாகவுடையனாய் வேதவேத்யனாயிருக்கிற அப்பெருமானை மறவாமலிருப்பதற்குறுப்பாக எனக்குத்தகுந்தாப்போலே ஒரு ஜ்ஞான த்ருஷ்டியுண்டாகி அத்தாலே கண்டுதழுவும்படியாயேயுள்ளது; மறக்கவும் வழியில்லைஇ தரிக்கவும் வழியில்லை என்றாராயிற்று.
ஆழ்வார்க்கு ப்ரேமம் ஞானம் என்று இரண்டுண்டு; கண்ணாரக்காணப் பெறாமையாலே ப்ரேமம் க்லேச ஹேதுவாயிற்று; மறந்து பிழைக்கவும் முடியாமையாலே ஞானமும் க்லேச
ஹேதுவாயிற்று என்று தளருகிறபடி.
கண்டுதழுவுவனே என்னுமிடம் களித்துக்கூறுவதுபோலத் தோற்றினாலும் பிரகரணத் திற்குச் சேரவேண்டுகையாலே க்லேசோக்தியாகவே பூருவர்கள் வியாக்கியானித்தருளினார்கள்.
இரண்டாமடியில் “அலர்ந்தேன்” என்கிற பாடம் பிழையுடைத்து; ‘அலந்தேன்’ என்றே யிருக்கத்தக்கது. பெரிய திருமொழியில் “அலந்தேன் வந்தடைந்தேன்” என்றார் திருமங்கை யாழ்வாரும். அலமந்தேன் என்றவாறு.
English Translation
Tears welling, felling low, I roam and look around. Alas, I do not see my Lord of discus conch coming. With proper mind’s eye I shall see and enjoy the great icon of pure knwoeldge, light of the Vedas
