(3305)
இடகி லேனோன் றட்ட கில்லேன் ஐம்புலன் வெல்லகில்லேன்,
கடவ னாகிக் காலந் தோறும் பூப்பறித் தேத்தகில்லேன்,
மடவன் நெஞ்சம் காதல் கூர வல்வினை யேன்அயர்ப்பாய்,
தடவு கின்றே னெங்குக் காண்பன் சக்கரத் தண்ணலையே?
பதவுரை
|
ஒன்று இடகிலேன் |
– |
(இரந்தார்க்கு) ஒரு பிச்சையும் இட்டறியேன்; |
|
ஒன்று அட்டகில்லேன் |
– |
(தாஹித்தவர்களுக்குச்) சிறிது (தண்ணீரும்) வார்த்தறியேன்; |
|
ஐம் புலன் |
– |
இந்திரியங்களைந்தையும் |
|
வெல்லகில்லேன் |
– |
பட்டிமேயாதபடி அடக்கியாண்டறியேன்; |
|
கடவன் ஆகி |
– |
நியதியுடையவனாகி |
|
காலம் தோறும் |
– |
உரிய காலங்களிலே |
|
பூ பறித்து ஏத்தகில்லேன் |
– |
புஷ்பங்களை ஸம்பாதித்து அர்ச்சித்துத் துதித்தறியேன்; |
|
(இப்படி அகிஞ்சநனாயிருக்கச் செய்தேயும்) |
||
|
மடம் வல் நெஞ்சம் |
– |
மூர்க்கத்தனமும் கடினத்தன்மையும் பொருந்தின நெஞ்சானது |
|
காதல் கூர |
– |
ஆசை விஞ்சிவரப்பெற்று |
|
வல் வினை யேன் |
– |
மஹாபாபியான நான் |
|
அயர்ப்பு ஆய் |
– |
அவிவேகியாய் |
|
சக்கரத்து அண்ணலை |
– |
சக்கரபாணியான எம்பெருமானை |
|
தடவுகின்றேன் |
– |
காணத்தேடுகின்றேன்; |
|
எங்கு காண்பன் |
– |
எங்கே காணக்கடவேண்? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமான்மேலே பழியிட்டுப் பயன் என்? அவனைக் காண்கைக்கு உபாயமாக பகவத்கீதை முதலான சாஸ்த்ரங்களிலே கூறப்பட்ட கர்மயோகாதிகளுள் ஒன்றிலும்
அந்வயமில்லாதிருக்கின்ற நான் கிடந்து கூப்பிடுவதில் என்ன ப்ரயோஜனம்? என்று தம்மில் தாம் சொல்லிக் கொள்ளுகிறாராயிருக்கிறது இடகிலேன் என்றது. “ஐயமும் பிச்சையும் ஆந்தனையுங்கைகாட்டி” என்கிறபடியே ஒருவர்க்கு ஒரு பிச்சையிட்டறியேன் என்றபடி. அட்டகில்லேன் என்றது தாஹித்து வந்தவர்களுக்குத் தண்ணீர் வார்த்தறியேன் என்றபடி. இங்ஙனே
சில காரியங்கள் செய்திருந்தால் கர்மயோகத்திலே கணக்கடைக்கலாம்; அதற்கு வழியில்லையாயிற்று என்கை.
ஐம்புலன் வெல்லகில்லேன்=செவிவாய் கண் முதலிய இந்திரியங்கள் பட்டிமேயாதபடி நோக்கினேனாகில் ஞானயோகத்திலே சிறிது அடியிட்டதாகக் கணக்கிடலாம்; அதற்கும் வழியில்லையாயிற்று.
கடவனாகிக் காலந்தோறும் பூப்பறித்து ஏத்தகில்லேன்= திருவாராதனத்திற்கு யோக்யதையுள்ள காலங்களிலே புஷ்பங்கள் சேகரித்துமறியேன், ஸமர்ப்பித்துமறியேன். இவை செய்தால்
பக்தியோகத்திலே சிறிது அந்வயமுள்ளதாகக் கணக்கிடலாம்; அது தனக்கும் வழியில்லையாயிற்று. கடவனாகி-ஒரு நியமத்தோடே கூடினவனாகி என்றபடி.
ஆகவிப்படி அகிஞ்சநனாயிருக்கச் செய்தேயும்இ ஏதோ நப்பாசையினால் அறிவுகெட்டவனாய்க்கொண்டு சக்கரபாணியான எம்பெருமானைத் தேடாநின்றேன்; காண வழி ஏது?
“சக்கரத்தண்ணலையே” என்றவிடத்து நம்பிள்ளையீடு;-“யசோதைப்பிராட்டி கையும் வெண்ணெயுமாகப் பிடித்துக் கொண்டாப்போலே கையும் * நெய்யாராழியுமாகப் பிடித்துக்
கொள்ளவாயிற்று இவர் ஆசைப்படுகிறது” என்பதாம்.
English Translation
I have no goodwill, no riches, no power over my senses, nor streadfast devotion to worship you with flowers; I have only sinful heart. O sinful me, I search, where can I see you, O Lord of discus and conch?
