(3265)
பெய்வளைக் கைகளைக் கூப்பிப் பிரான்கிடக் கும்கடல் என்னும்,
செய்யதோர் ஞாயிற்றைக் காட்டிச் சிரீதரன் மூர்த்தியீ தென்னும்,
நையும்கண் ணீர்மல்க நின்று நாரணன் என்னுமன்னே,என்
தெய்வ வுருவில் சிறுமான் செய்கின்ற தொன்றறி யேனே.
பதவுரை
| பெய் வளை கைகளை |
– |
(பலகாலும் கழன்று பிறகு) இடப்படாநிற்கிற வளைகளையுடைய தனது கைகைகளை |
| கூப்பி |
– |
குவித்து அஞ்சலி பண்ணி (கடலைப் பார்த்து) |
| பிரான் |
– |
உபகார சீலனான எம்பெருமான் |
| கிடக்கும் |
– |
(எனக்கு முகங்காட்டப்) பள்ளிகொண்டிருக்கிற |
| கடல் என்னும் |
– |
கடல் (இது) என்று சொல்லுவது; |
| செய்யது ஓர் ஞாயிற்றை காட்டி |
– |
சிவந்த ஒளியில் ஒப்பற்றவனான சூரியனைச் சுட்டிக் காட்டி |
| சிரிதரன் மூர்த்தி ஈது என்னும் |
– |
‘பெரிய பிராட்டியாரோடே கூடியுள்ள எம்பெருமானது வடிவு இது’ என்று சொல்லுவாள்; |
| கையும் |
– |
(தான் அவனைக்கிட்டி அநுபவிக்கப்பெறாமையாலே) வாடுவாள்; |
| கண் நீர் மலக நின்று |
– |
(அந்த வாட்டத்தினாலே) கண்ணீர் பெருக நின்று |
| நாரணன் என்னும் |
– |
‘நாரணன்’ என்று வாய்வெருவுவாள், |
| அன்னே |
– |
அம்சே! |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- என் தெய்வம் உருவில் சிறுமான் -என்னுடைய (நித்யஸூரிகள் வடிவுபோல) அப்ராக்ருதமான வடிவையுடையளாய் மான்போல் இளையபருவத்தையுடையளான இவள் செய்கின்றது ஒன்று அறியேன் -செய்கின்ற காரியங்கள் ஒன்றும் அறிகிலேன்.
எம்பெருமானோடு ஸம்பந்தமுடைய கடலையும் ஸூர்யனையுங்கண்டு பராங்குசநாயகி சொல்லுமவற்றைத் திருத்தாயார் கூறுகின்றார். திவ்யமான வடிவுபடைத்தவிவள் செய்வதொன்றும் எனக்கு இன்னதென்று தெரிகின்றதில்லை யென்கிறார்.
பெய்வளைக் கைகளைக்கூப்பி-இப்போது ஆழ்வார்க்கு விச்லேஷதசையன்றோ செல்லுகின்றது; இப்பிரிவு நிலையில் கையில்வளைகள் கழன்றனவாகப் பேசுகையன்றோ முறைமை; பெய்வளைக் கைகளென்னலாமோ? என்று சங்கை தோன்றும்; இந்த சங்கையை நம்பிள்ளை திருவுள்ளத்திற்கொண்டு ஸமாதானமாக அருளிச்செய்கிறார்- “கடல் வண்ணன் என்றவாறே, கழன்ற வளைகளொழியச் சரிந்தவளைகள் பூரித்தனகாணும்’ என்று இவ்விடத்தில் ஒரு சுலோகம் நினைக்கத்தக்கதுண்டு; அதாவது *** யாமி நயாமீதி தவே வததி புரஸ்தாத் க்ஷணெந தந்வங்க்யா: களிதாநிட புரோவலயாநி அபராணி புநஸ் ததைவ தளிதாநி.” என்பதாம். (இதன் கருத்து.) கையில் பலவளைகளை அணிந்து கொண்டிருந்த நாயகியோடு நாயகன் பேசிக்கொண்டிருக்கும்போது அவனை நோக்கி யாமி என்றான்; வெளியூருக்குப் போவதாக இருக்கிறேன் என்றபடி. இங்ஙனே பிரிவை பிரஸங்கித்தவாறே அக்காதலி பிரிவு வந்திட்டாகவே கருதி அப்போதே மேனி காதலன் அவளுடைய பிரிவாற்றாமையக் கண்டு நொந்து, தான் பிரிந்து செல்வது தகாதென்று துணிந்து நயாமி என்றான்; இதை இரண்டு சொற்களாகக் கொண்டால் ‘நான் பிரிந்து போவேனல்லேன்’ என்று பொருளாகும்; ஒரே சொல்லாகக் கொண்டால் ‘உன்னையும் உடனழைத்துக்கொண்டு போகிறேன்’ என்று பொருளாகும். இங்கே ஏகப்ரயயோகத்திலே அந்த க்ஷணத்திலேயே பிரிவாற்றாமைத்துயர் தொலையப்பெற்று உடல் பூரிக்கப்பெற்றதனால் முன் க்ஷணத்திலே கழன்றொழிந்த வளைகள்போக சேஷித்தவை (உடல் பூரிப்பாலே) படீலென்று வெடித்து விழுந்ததொழிந்தனவாம். இந்த ரிதியில் விச்லேஷ தசையில் இருக்கினற பராங்குச நாயகிக்குக் கையில்வளை பெய்யப்பெற்றிருத்தல் கூடுமோ? என்று சங்கை; விச்லேஷ தசையா யிருக்கச்செய்தேயும் (கீழப்பாட்டில்) கடல்வண்ணனென்று தலைவனது திருநாமத்தை உச்சரிக்கப்பெற்ற உவப்பினால் சிலவலைகள் கையில் தங்கியிருந்தன வென்று சங்காபரிஹாரம் செய்ததாயிற்று.
அஞ்ஜலி மாறாதே யிருந்தாள்; கடலோசைவந்து செவிப்பட்டது; கண்ணுக்கு இலக்காக வேண்டிய எம்பெருமான் காதுக்கு இலக்கானதாகக் கருதினாள்; கடலோசை வழியாய்க் கடலை நினைத்துக் கடல்வண்ணனான எம்பெருமானை நினைத்து, அப்பெருமான் பள்ளி கொண்டருளுங் கடலன்றோ இது! என்னா நின்றாள். பிரான் என்றது இராமபிரான் என்றபடியாய், அவன் ஒரு பிராட்டியைப் பெறுதற்காகக் கடற்கரையிலே தரைக்கிடை கிடந்தவாற்றை நினைத்துப் பிரான்கிடக்குங்கடல் என்றதாகவுங் கொள்ளலாம்.
செய்யதோர் நாயிற்றைக் காட்டிச் சிரிதரன்மூர்த்தி யீதென்னும் = இரவெல்லாம் கடலோசையோடே வருந்திக்கிடந்து, பொழுது விடிந்தவாறே ஸூர்யனைக் கண்டதும் ‘ஸ்ரீதரனுடைய வடிவு இது’ என்கின்றாள். கீழே கடல்வண்ணனாக அநுஸந்திக்கப்பட்ட எம்பெருமானை இப்போது ஸூர்யனாக அநுஸந்திப்பதற்கு, என்ன பொருத்தம்? என்ற சங்கை பிறக்கும். இங்கு ஆறாயிரப்படி யருளிச்செயல் காண்மின்;-“எம்பெருமானும் பிராட்டியும், ஆதித்யனும் அவனுடைய ப்ரபையும்போல இருக்கையாலே, அந்த ஆதித்யனைக்காட்டி ஸ்ரீதரன் மூர்த்தியீதென்னும்” என்பதாம்.-ஸ்ரீ ராமாயணத்தில் ராவணனை நோக்கிப் பிராட்டி சொல்லுகையில் “அநந்யா ராகவேணாஹம் பாஸ்கரேண ப்ரபா யதா” என்றாள்; ராவணவத்திற்குப் பிறகு பிரமன் முதலிய தேவர்களை நோக்கி ஸ்ரீ ராமபிரான் சொல்லுகையில் “அநந்யா ஹி மயா ஸீதா பாஸ்கரேண ப்ரபா யதா” என்றான். இங்ஙனே திவ்ய தம்பதிகளின் திருவாக்கினால் எம்பெருமான் ஸூர்யனோடொப்பப் பரிகணிதனானமையால் ஸூர்யனைப் பார்க்கும் போது கிரிதரன் நினைவுக்கு வரக் குறையில்லை. “ப்ரபா ப்ரபாவான்களைக் கண்டவாறே அவளுமவனுமாக இருக்குமிருப்பை நினையா நின்றாள்.” என்பது ஈடு முப்பத்தாறாயிரம்.
ஆசார்ய ஹ்ருதயத்தில் “புரவியேழொருகாலுடைய தோரிலே” என்று தொடங்கியுள்ள சூர்ணிகையில் “கீரிதரன் மூர்த்தி யிதென்னும்” என்கிற இந்தப் பாசுரம் எடுத்தாளப் பட்டுள்ளது. அவருடைய திருவுள்ளத்தின்படி பார்க்குமளவில், “த்யேயஸ் ஸதா ஸவித்ரு மண்டல மத்யவர்த்தீ நாராயண:” என்கிறபடியே எம்பெருமான் ஸூர்யமண்டல மத்யஸ்தனாதலால் அதுபற்றி “செய்யதோர் நாயிற்றைக் காட்டிச் சிரிதரன்மூர்த்தி யீதென்னும்” என்றதாகக் கொள்ளலாம்.
கண்ணீர்மல்க நின்று நையும்=கீரிதரன் என்னும்படியே புருஷகாரபூதையான ஸ்ரீ மஹாலக்ஷ்;மி அருகேயிருக்கச் செய்தேயும் பேறிழந்த நான் இனி யார் புருஷகாரமாகப் பெறவிருக்கிற னென்று உடைகுலைப்படா நின்றாள். ஸ்ரீமந் நாராயணனென்று கூடச் சொல்லமாட்டாதே நாரணன் என்கின்றாள்.
எம்பெருமானுக்குப் போலியான பொருள்களையும் அவனோடு தொடர்புள்ள பொருள்களையும் அநுஸந்திக்க வநுஸந்திக்க, நித்யாநுபவசாலிகளான நித்ய ஸூரிகளின் வடிவில் பிறக்கும் புகர் இவர்கட்குப் பிறக்கின்றமையைத் தாய் தெரிவிக்கின்றான் என் தெய்வுருவிற் சிறுமான் என்பதனால்.
செய்கின்றதொன்று அறியேன் = இவள் தொடங்குவது என்ன? தலைக்கட்டுவது என்ன? என்பதொன்று மறிகின்றிலே னென்றபடி.
English Translation
She folds her bangled hands and says, “The Lord sleeps in the ocean!” She points to the red Sun and says, “That is Sridhara’s icon-form” With tears welling, she swoons, then only says, “Narayana!” Ladies! I can scarcely understand the things my godly fawn does
