(3260)
என்ன தாவி மேலையாய் ஏர்கொள் ஏழு லகமும்,
துன்னி முற்று மாகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்,
உன்ன தென்ன தாவியும் என்ன துன்ன தாவியும்
இன்ன வண்ண மேநின்றாய் என்று ரைக்க வல்லேனே?
பதவுரை
|
என்னது ஆவி மேலியாய் |
– |
என் ஆத்மவஸ்துவிலே அபிநிவேசமுடையனாய்க் கொண்டு |
|
ஏர்கொள் ஏழ் உலகமும் |
– |
அழகிய கைல லோகங்களிலும் |
|
முற்றும் ஆகி நின்ற |
– |
ஸகல பதார்த்தங்களும் தனக்கு ப்ரகாரமாம்படி நின்ற |
|
சோதி ஞானம் மூர்த்தியாய் |
– |
சோதிமயமான ஞானத்தை ஸ்வரூபமாகவுடையவனே! |
|
என்னது ஆவி |
– |
என் ஆத்மஸ்வரூபம் |
|
உன்னதும் |
– |
நீயிட்ட வழக்காகவும் |
|
என்னதும் |
– |
நானிட்ட வழக்காகவுமான |
|
இன்ன வண்ணமே நின்றாய் |
– |
இப்படியிலே நின்றாய் |
|
என் உரைக்க வல்லேன் |
– |
இதற்கு என்ன பாசுர மிட்டுச் சொல்லுவேன்? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எனக்காக ஸகலலோகங்களையும் வியாபித்து என்னையங்கீகரித்த உன் படி பேச்சுக்கு நிலமன்று என்கிறார்.
என்னதாவி மேலையாய் என்பதற்கு இரண்டுபடியாக நிர்வாஹம்;-என்னுடைய ஸத்தையைப்பெற்று அத்தாலே மிகுந்த ஆனந்தம் படைத்தவனே! என்னுதல்; என்னைப் பெறவேணுமென்கிற ஆவலையுடையவனே! என்னுதல். உள்ளதான சொல்வடிவம் இவ்விரண்டுவகை நிர்வாஹத்திற்கும் எங்ஙனே இடந்தருகின்றதென்னில்; என்னதாவி மேலையாய் என்பதற்கு என்னுடைய ஆவியின் மேலே காட்டிய இரண்டு வகையான கருத்தும் இதில் உறையும்; ஆசைப்பட்ட ஒரு வஸ்துவைப் பெற்றுவிட்டவன் விஷயத்திலும் பெற நினைப்பவன் விஷயத்திலும் இங்ஙனே சொல்லத்தகும் கீதையில் ஸததயுக்தாநாம் என்பதற்கு “ ‘***’ ஸததயோகம் காங்க்ஷமாணாநாம்” என்று எம்பெருமானார் பெர்ருள் பணித்ததும் இங்கு ஒரு புடை நோக்கத்தக்கது.
பெற்றுத் தீர்ந்துவிட்டதாகச் சொல்லுகிற அர்த்தமும், பெறவேணுமென்று ஆவல் கொண்டிருப்பதாகச் சொல்லுகிற அர்த்தமும் ஒன்றோடொன்று பொருந்தாதாதலால் மேலே காட்டிய இரண்டு நிர்வாஹங்களையும் விகல்பமாகக் கூறியிருப்பது எங்ஙனே பொருந்துமென்று சங்கை பிறக்கக்கூடும். இவ்வர்த்தங்களுக்குப் பொருந்தாமையொன்றுமில்லை. ஆழ்வார் விஷயத்திலே எம்பெருமான்பெற நினைத்திருக்கும் அளவுகள் பல பலவுண்டு; அவற்றில் பெற்றுத் தலைக்கட்டியவை சில; இனிப் பெறவேண்டியவை சில; எந்த வஸ்து பெற்றுத்தீர்ந்ததோ, அதிலேயே பெறவிருப்பமும் உள்ளதாகக் கூறினாலன்றோ விரோதமுள்ளது என்றுணர்க.
(ஏர்கொளேழுலகமும் இத்யாதி.) இதற்கும் இரண்டுபடியாக நிர்வாஹம்; என்னதாவி மேலையாய்! என்பதற்கு ‘என்னுடைய ஸத்தையைப் பெற்று அத்தாலே மிகுந்த ஆனந்தம் படைத்தவனே! என்று பொருள் கொள்ளும் பக்ஷத்தில் அதற்குச் சேர இதற்கும் பொருள் கொள்ளவேண்டும்; ஏற்கனவே எம்பெருமான் எங்கும் நிறைந்திருந்தாலும் இப்போது ஆழ்வாரைப் பெற்ற ப்ரீதியாலே அந்தவ்யாப்தி இப்போதே ஸபலமானதாக எம்பெருமான் நினைத்த நினைவு தோற்றச் சொல்லுகிறபடி. இதற்கு முந்தி வ்யாபகனன்றிக்கே இப்போதுதான் வியாபகனானா யென்றபடி. ‘எனனதாவிமேலையாய்!’ என்பதற்குக் கூறிய இரண்டாவது நிர்வாஹத்திற்குச் சேரஇ தம்மை அகப்படுத்திக் கொள்ளுகைக்காக எம்பெருமான் எங்கும் வியபித்திருக்கிறானாகக் கூறுவதாய்ப் பொருள்கொள்ளவேணும். ஈடு;-“(ஏர் கொளித்யாதி.) இவரைப் பெற்ற ப்ரீதியாலே வ்யாப்தியும் புதுக்கணித்ததென்னுதல்; ஒருவனைப் பிடிக்க நினைத்து அவன் பக்கலுண்டான அபிநிவேசத்தாலே ஊரைவளைவாரைப் போலே தம்மை அகப்படுத்துகைக்காக வ்யாப்தனானானென்றிருக்கிறாராதல்.
(உன்ன தென்ன தாவியும் இத்யாதி.) என் ஸ்வரூபம் நீ இட்ட வழக்குஇ உன் ஸவ்ரூபம் நானிட்ட வழக்கு என்பது தேர்ந்தபொருள். இவ்விடத்தை ஆளவந்தார் அருளிச் செய்யும்போது கேட்டிருந்த முதலிகளிலே சிலர் ‘ஜூவாத்மாவின் ஸ்வரூபம் பரமாத்மா இட்ட வழக்கு என்றால் இதில் பொருந்தாமை யொன்றுமில்லை; பரமாத்மாவின் ஸ்வரூபம் ஜீவாத்மா ஆளவந்தார் அருளிச்செய்தபடி-“இவன் அவனிட்ட வழக்கு என்கிற விஷயத்தில் கர்மம் தடையாக நிற்கங்கூடும்; ஸர்வேச்வரன் தன்னை இவனிட்ட வழக்காக்குமிடத்தில் தடை செய்வாரில்லை; ஆனபின்பு ‘உன்னதாவி என்னது’ என்பதுதான் நிர்விவாதம். ‘என்னதாவி உன்னது’ என்றதில் நீங்கள் விவாதப்பட்டால் படலாமேயல்லது ‘உன்னதாவி என்னது’ என்றதில் விவாதப்பட நியாயமில்லை” என்றாம்.
இப்படி ஒரு நீராகக் கலந்து பரிமாறும் பிரணயித்குணம் என்னால் பேசிக் கட்டலாயிருந்ததோவென்’ற முடித்தாராயிற்று.
English Translation
Filling the seven fair worlds, you become them all, O Luminous icon of knowledge, borne by my soul! My soul is yours, your soul is mine; how can I say how?
