(3252)

(3252)

மெலியுநோய் தீர்க்கும்நங் கண்ணன் கழல்கள்மேல்,

மலிபுகழ் வண்குரு கூர்ச்சட கோபன்சொல்,

ஒலிபுகழ் ஆயிரத் திப்பத்தும் வல்லவர்,

மலிபுகழ் வானவர்க் காவர்நற் கோவையே.

 

பதவுரை

மெலியும் நோய் தீர்க்கும்

மெலிவை விளைக்கும்படியான பிரிவுநோயைப் போக்கவல்லவனான

நம் கண்ணன்

நமது கண்ணபிரானுடைய

கழல்கள் மேல்

திருவடி விஷயமாக

மலி புகழ்

வளர்ந்த புகழையுடைய

வண் குருகூர் சடகோபன்

திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார்

சொல்

அருளிச்செய்த

ஒலி புகழ்

கொண்டாடப்பட்ட குணபூர்த்தியையுடைய

ஆயிரத்து

ஆயிரத்திலும்

இப்பத்தும்

இப்பத்துப் பாசுரங்களையும்

வல்லவர்

ஓதவல்லவர்கள்

மலி புகழ்

மிக்கபுகழையுடைய

வானவர்க்கு

நிதய்சூரிகளுக்கு

நல் கோவை ஆவர்

நல்ல சேர்த்தியாவர்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்திருவாய்மொழி கற்றார் நித்யஸூரிகளோடு ஒரு கோவையாகப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிற பாசுரமிது.  ஆழ்வார் மெலியுமளவான வளவிலே எம்பெருமான் வந்து முகங்காட்டி ஆற்றாமையைப் போக்கி ஒருவாறு ஆச்வஸிப்பித்தம்மை முதலடியில் தொனிக்கும்.  திருக்குரவை கோத்தவன்று வெள்ளக்கேடாக வொண்ணாதென்று கண்ணன் ஆய்ச்சிகளைப் பிரிந்துமைறைவது நிற்க, அவர்களும் பிரிவாற்ற மாட்டாதே கண்ணஞ்சுழலையிட்டுச் சாலவும் வருந்திக்கிடக்க, இனி உய்யவிரகில்லை யென்னும்படி முடியுமளவானவாறே தாஸாமாவிரபூத் செளரி: ஸ்மயமாநமுகாம்புஜ:இ பீதாம் பரதர: ஸ்ரக்வீ ஸாகூஷாந்மந்மதமந்மத” என்கிறபடியே பிதகவாடைப்பிரான் சடக்கெனத் தோன்றி முகங்பாட்டினமை ப்ரஸித்தமேயன்றோ.  இங்ஙனே ஆபத்துக்களிலேவந்து உதவுமியல்வினனான கண்ணபிரான் ஆழ்வார்க்கும் சாட்சிதந்து தேற்றுவித்தானாயிற்று. இப்படிப்பட்ட எம்பெருமானது திருவடி விஷயமாக ஆழ்வாரருளிச் செய்த ஆயிரத்துள் இப்பத்தும் ஓதவல்லவர்கள் வானவரோடு நல்ல சேர்த்தியாவார்கள்.

 

English Translation

This decad of the thousand beautiful songs by Satakopan of beautiful Kurugur city, is addressed to Krishna’s feet, the cure for love-sickness.  Those who can sing it will be fitting company for celestials

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top