(3243)
வல்லிசேர் நுண்ணிடை யாய்ச்சியர் தம்மொடும்,
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்,
நல்லடி மேலணி நாறு துழாயென்றே
சொல்லுமால், சூழ்வினை யாட்டியேன் பாவையே.
பதவுரை
|
சூழ் வினையாட்டினேன் |
– |
மிகுந்த தீவினையை யுடையனோகிய என்னுடைய |
|
பாவை |
– |
பதுனம் போன்ற பெண்ணானவன் |
|
வல்லி சேர் |
– |
கொடி போன்று |
|
நுண் |
– |
நுட்பமான |
|
இடை |
– |
இடுப்பையுடைய |
|
ஆய்ச்சியர்தம்மொடும் |
– |
கோபிமார்களோடுகூடி |
|
கொல்லைமை செய்து |
– |
வரம்புகடந்த செயல்களைச் செய்து |
|
குரவை பிணைந்தவர் |
– |
ராஸக்ரீடை செய்த கண்ணபிரானுடைய |
|
நல் அடி மேல் அணி; |
– |
அழகிய திருவடிகளின் மீது சாத்தின |
|
நாறு துழாய் என்றே |
– |
நறுமணம்மிக்க திருத்துழாயென்றே |
|
சொல்லும் |
– |
சொல்லுகின்றாள்; |
|
ஆல் |
– |
அந்தோ! |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கண்ணபிரான் ஆய்ச்சிகளோடு கூடிக் குரவை கோத்தகாலத்துச் திருவடியிலணிந்து கொண்டிருந்த திருத்துழாய் மாலையை என்மகள் வாய் வெருவுகின்றாளென்கிறாள். குரவை யெனபது ராஸக்ரிடை யெனப்படும். ஒவ்வொரு கண்ணனாகப் பல திருவுருவங்கொண்டு கைகோத்தாடினது வடமொழியில் ராஸக்ரிடை யென்றும், தென்மொழியில் குரவை கூத்தென்றும் வழங்கப்பெறும்.
வல்லிசேர்நுண்ணிடையாய்ச்சயர்-‘வல்லிசேர்’ என்பதை இடைக்கு விசேஷணமாக்குதலுமுண்டு; ஆய்ச்சியர்க்கே விசேஷணமாக்குதலுமுண்டு; முந்தினபக்ஷத்தில், கொடி போன்ற இடையை யுடையவர்களென்னுதல்; பிந்தினபக்ஷத்தில் பொடிபோன்றவர்களாயும் நுட்;பமான இடையை யுடையராயுமிருக்கின்ற ஆய்ச்சிகளென்னுதல்.
கொல்லைமைஸ்ரீ வரம்பு கடந்த செயல்; ‘கொல்லை’ என்னும் சொல்லின்;மீது மைவிகுதி ஏறிக்கிடக்கிறது. “கொல்லையரக்கியை மூக்கரிந்திட்ட” என்ற ஆண்டாள் பிரயோகமும் “கொல்லை யென்பர் கொலோ” என்ற நம்மாழ்வார் பிரயோகமும் காணத்தக்கன. கூரத்தாழ்வான் அதிமாநுஷஸத்தில் “துர்ர்த்தாயிதம் யத் கில ராஸகோஷ்ட்யாம்” என்ற தில் துர்ர்த்தாயிதம் என்றதுவே கொல்லையாகும்.
பாவை= பதுமைக்குப் பெயர்; இது, உவமையாகுபெயராய்ப் பெண்பிள்ளளையையுணர்த்தும்.
English Translation
O, The vicious snare trapping my daughter She asks for the fragrant Tulasi from the feet of the Lord, -who unabashedly played amorous sport with cowherd-girls of tendril-thin waists
