(3241)

(3241)

அஃதே உய்யப் புகுமாறென்று கண்ணன் கழல்கள்மேல்,

கொய்பூம் பொழில்சூழ் குருகூர்ச்சடகோபன் குற்றேவல்,

செய்கோலத் தாயிரம் சீர்த்தொடைப்பாடல் இவைபத்தும்,

அஃகாமற் கற்பவர் ஆழ்துயர் போயுய்யற் பாலரே.

 

பதவுரை

உய்யப் புகும் ஆறு

உஜ்ஜீவநோபாயம்

அஃதே என்று

திருநாராணன் தாள்களேயென்று அறுதியிட்டு

கண்ணன்

எம்பெருமானுடைய

கழல்கள் மேல்

திருவடிகள் விஷயமாக

கொய் பூ

திருவடிகள் விஷயமாக

பொழில் சூழ்

கொய்வதற்குரிய பூக்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட

குருகூர்

திருநகரிக்குத் தவைரான

சடகோபன்

ஆழ்வாருடைய

குற்றேவல்

வாசிக கைங்கர்ய ரூபமாயும்

செய் கோலத்து

ஸர்வாலங்கார ஸம்பந்தமாயுமிருக்கிற

ஆயிரம்

ஆயிரந்தொகையுள்ள

சீர் தொடை பாடல்

திருக்குணங்களை யிட்டுத் தொடுத்த மாலை போன்ற இப்பாடலில்

இவை பத்தும்

இப்பத்துப் பாசுரங்களையும்

அஃகாமல்

குறைவின்றி

கற்பவர்

ஓதுமவர்கள்

ஆழ் துயர் போய்

ஆழ்ந்த துயர் நீங்கப்பெற்ற

உய்யற்பாலர்

உஜ்ஜூவிக்குந் தன்மையை யுடையராவர்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- துயரங்கள் தீர்ந்து ஆத்மோஜ்ஜூவநம் பெறுவதே இத்திருவாய்மொழி கற்பதற்குப் பலன் என்று பயனுரைத்துத் தலைகாட்டுகிறார்.  எம்பெருமானது திருவடிகளே உபாயமென்று அத்திருவடிகள் விஷயமாக ஆழ்வார் வாசிக கைங்கர்யரூப்மாய் அருளிச்செய்ததும் ஸர்வாலங்கார பூர்ணமுமான ஆயிரத்தினுள் இவைபத்தையும் குறையறக் கற்பவர்கள் ஐச்வர்ய கைவல்யங்களிலே ஆழங்காற்பட்டுவரும் கிலேசம்நீங்கி பகவத் கைங்கர்ய மஹாரஸத்தைப்  பெறுவாரென்றதாயிற்று.

அஃதே என்றது-இப்பதிகத்தின் முதற்பாட்டிலும் இப்பாட்டிலும் ப்ரஸ்துதமான திருவடியைக் குறிக்கும்.

செய்கோலத்தாயிரம் என்றவிடத்து “உத்ர்த்தாதி பதக்ரம ஜடாவாக்ய பஞ்சாதிபாதவ்ருத்த ப்ரசநகாண்ட அஷ்டகாத்யாயாம்சபர்வாதி அலங்காரங்கள்போலே எழுத்தசைசீர்ப்பந்தமடி தொடை நிரைநிரையோசை களையினம்யாப்புப் பாத்துறை பண்ணிசை தாளம் பத்து நூறாயிரம் முதலான செய்கோல மிதுக்குமுண்டு” என்ற ஆசார்யஹருதய திவ்யஸூக்தியும் அதன் வியாக்கியானமும் அநுஸந்தேயம்.

உய்யப்பாலோ என்ற பாடத்தினும் ‘உய்யற்பாலரே’ என்ற பாடம் தகும்.

 

English Translation

This decad of the beautiful thousand songs, by Satakopan of dense flower-groved Kurugur, is addressed to the feet of Krishna, sole refuge.  Those who learn it shall rise from deep despair and be elevated

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top