(3230)

(3230)

கேடில்வி ழுப்புகழ்க் கேசவ னைக்குரு கூர்ச்சட கோபன் சொன்ன,

பாடலோ ராயிரத் துளிவை பத்தும் பயிற்றவல் லார்கட்கு,அவன்

நாடும் நகரமும் நன்குடன் காண நலனிடை யூர்தி பண்ணி,

வீடும்பெறுத் தித்தன் மூவுல குக்கும் தருமொரு நாயகமே.

 

பதவுரை

கேடு இல்

ஒருநாளுமழில்லாத

விழு புகழ்

சிறந்த புகழையுடையனான

கேசவனை

எம்பெருமான் விஷயமாக குருகூர் சடகோபன் சொன்ன

பாடல் ஓர் ஆயிரத்துள்

ஓராயிரம் பாசுரங்களினுள்ளே

இவையும் ஒரு பத்தும்

இப்பதிகத்தை

பயிற்றவல்லார்கட்கு

ஓதவல்லவர்களுக்கு

அவன்

அந்த எம்பெருமான்

நாடும் நகரமும்

சிறியார் பெரியாரென்கிறவாசியின்றிக்கே அனைவரும்

நன்குடன் காண

நன்றாகக் காணும்படி

நலன் இடை ஊர்தி பண்ணி

பகவத் பாகவத் விஷயத்தில் அடிமைச் செல்வத்தோடே நடக்கும்படி பண்ணி

வீடும் பெறுக்கி

மோக்ஷானந்தத்தையும் அடைவித்து

தன் மூவுலக்கும்

தன்னுடையதான மூவுலகங்கட்கும்

ஒரு நாயகம்

ஏகாதிபதியாயிருக்கும் சிறப்பையும்

தரும்

தந்தருள்வன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். நித்யாஸித்த கல்யாண்குண பூஷிதனான எம்பெருமான் விஷயமாக ஆழ்வாரருளிச்செய்த ஆயிரத்தில் இப்பத்துப் பாசுரங்களையும் ஓதவல்லவர்கட்கு உபயவிபூதி ஸாம்ராஜ்யமும் குறையற உண்டாம்படி எம்பெருமான் அநுக்ரஹம் செய்தருள்வன் என்றாறாயிற்று.

பயிற்றவல்லார்- தாங்கள் ஓதுமவர்கள், பிறரை ஓதுவிக்குமவர்கள் என்ற இருவகைப் பொருளும் கூறுவார்.

 

English Translation

This decad of the thousand songs by kurugur satakopan on the perfect Kesava, praised by town and country, gives his glory and grants liberation and world-sovereignty forever.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top