(3229)

(3229)

தளர்வின்றி யேயென்றும் எங்கும் பரந்த தனிமுதல் ஞானமொன்றாய்,

அளவுடை யைம்புலன் களறி யாவகை யாலரு வாகிநிற்கும்,

வளரொளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள் ஐந்தை யிருசுடரை,

கிளரொளி மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி யானென்றும் கேடிலனே.

 

பதவுரை

என்றும்

எக்காலத்திலும்

எங்கும்

எவ்விடத்திலும்

தளர்வு இன்றியே

ஆயாஸமில்லாமல்

பரந்த

வியாபித்திருக்குமவனாய்,

தனி முதல் ஞானம்

அத்விதீயமாய் ஸமஸ்த காரணமான ஞானமே வடிவெடுத்தவனாய்

அளவு உடை

அளவுபட்ட

ஐம் புலன்கள்

இந்திரியங்கள் ஐந்தினாலும்

அறியாவகையால்

அறியக்கூடாதபடி

அரு ஆகி நிற்கும்

நிரவயவஸ்ரூபனாயிருக்குமவனாய்,

வளர் ஒளி ஈசனை

வளர்கின்ற வொளியையுடைய ஸ்வாமியாய்

மூர்த்தியை

விலக்ஷண விக்ரஹயுக்தனாய்

பூதங்கள் ஐந்தை

பஞ்சபூத நிர்வாஹகனாய்

கிளர் ஒளி மாயனை

ஒளி பொருந்தி மேன்மேலுங் கிளர்கின்ற ஆச்சர்ய சேஷ்டைகளை யுடையனான

கண்ணனை

கண்ணபிரானை

தாள் பற்றி

திருவடிதொழப்பெற்றதனால்

யான் என்றும் கேடு இலன்

யான் ஒருநாளும் கேடு உடையேனல்லேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அனைவர்க்கும் அந்தராத்தபூதனான ஸ்ரீக்ருஷ்ணனைப் பற்றின நான் ஒரு அழிவையுமுடையேனல்லேனென்கிறார். “தளர்வின்றியே யென்று மெங்கும் பரந்த” என்றது எம்பெருமானுக்கு விசேஷணம். எல்லாக் காலத்திலும் எல்லாவிடத்தும் தன்னுடைய நியாமகத்வசக்திக்குத் தளர்த்தியில்லாது பூர்த்தியோடே வியாபித்திருக்குமவன் என்றபடி. “தனிமுதல் ஞானமொன்றாய்” என்றது – ஸகலப்ரபஞ்சஸ்ருட்டிக்கும் வேறொருகருவி வேண்டாதபடி ஸங்கல்ப்ரூப ஜ்ஞானமொன்றையே அத்விதீய ஸாதனமாகவுடையவன் என்றபடி. தனிமுதல் என்பதையும் எம்பெருமானுக்கே அடைமொழியாக்குதலுமுண்டு.

செவி வாய் கண் மூக்குடலென்னும் ஐம்புலன்கள் அற்பவிஷயங்களை க்ரஹிக்கவல்லவையேயன்றி, அபரிச்சிந்ந விஷயமான எம்பெருமானை க்ரஹிக்க முடியாதவன். உழக்காலே கடலை முகக்கவொண்ணாதாப்போலே ஐம்புலன்களால் அறியவொண்ணாதபடி அவற்றுக்கு அவ்விஷயமாயிருப்பவன் என்கிறது இரண்டாமடியால், அளவுடையைம்புலன்களென்றது- அளவுபட்ட விஷயங்களை கிரஹிக்கவே ஏற்பட்ட பஞ்சேந்திரியங்களென்றபடி.

சேதநாசேதனங்களோடே கலசியிருக்கச் செய்தேயும் அவற்றின் தோஷங்கள் தன்பக்கலில் தட்டாமல் ஒளிமல்கி யிருக்கும்படியைக் கூறுவது “வளரொளியீசனை” என்பது, அஸாதாரண திவ்யவிக்ரஹ முடையை சொல்லுகிறது மூர்த்தியை என்று.

 

English Translation

The first-cause Lord of effulgent knowledge, pervader of all, stands as a formless being unknown to the five senses.  He is the radiant Krishna, effulgent icon, the orbs and the elements, I have attained him, and overcome my pall.

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top