(3205)

(3205)

கோலமே தாமரைக் கண்ணதோர் அஞ்சன

நீலமே,நின்றென தாவியை யீர்கின்ற சீலமே,

சென்றுசொல் லாதன முன்நிலாம் காலமே,

உன்னையெந் நாள்கண்டு கொள்வனே?

 

பதவுரை

கோலமே

அழகுதானே வடிவெடுத்தாற்போன்றுள்ளவனே!

தாமரைக் கண்ணது

தாமரை போன்ற திருக்கண்களையுடையதாகிய

ஓர் அஞ்சனம் நீலமே

ஒப்பற்ற அஞ்சனமலைபோன்ற நீலநிறமுடையவனே!

நின்று

நிலை நின்று

எனது ஆவியை

என் ஆத்மாவை

ஈர்கின்ற

ஈடுபடுத்துகின்ற

சீலமே

சீலகுணமே வடிவெடுத்திருப்பவனே!

சென்று செல்லாதன முன் நிலாம் காலமே

இறந்தகாலம் எதிர்காலம் நிகழ்காலம் என்னும் முக்காலங்களுக்கும் நியாமகனே!

உன்னை

உன்னை

எந்நாள்

என்றைக்கு

கண்டு கொள்வன்

கண்டு அநுபவிப்பேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  “பலகாலும் கூவியுங் காணப்பெறேனுன கோலமே” என்ற தம்மைக் குறித்து எம்பெருமான் ‘உம்முடைய அபேக்ஷிதம் பூர்த்திசெய்கைக்கீடான காலம் வரவேண்டாவோ? என்று அருளிச்செய்ததாகக்கொண்டு, ‘காலமும் நீயிட்ட வழக்கன்றோ? நான் இழக்கக் தகுமோ?’ என்கிறார்.

கோலமே!= கோலம் என்று அழகுக்குப் பெயர்; அழகியவனே! என்று சொல்லவேண்டியிருக்க அழகே! என்றது- ‘அழகுதானே ஒரு வடிவெடுத்தது’ என்னலாம்படியிருக்கையாலே. இவ்விடத்தில் ‘அழகே விஞ்சி அத்தையிட்டு நிரூபிக்க வேண்டும்படி யிருக்கையாலே கோலமே யென்கிறார்” என்ற ஈடு காண்க.

தாமரைக்கண்ணதோர் அஞ்சனநீலமே!= கீழ்ச்சொன்ன அழகுக்கு ஆச்ரயம் திருமேனி: அந்தத் திருமேனிக்குள்ளே மிகச் சிறந்தது கண்ணழகு; அதனை யநுபவிக்கிறபடி. “க:  புண்டரீகநயந: ” என்னலாம்படியன்றோவிருப்பது. அஞ்சன நீலமே என்பதை இரண்டு வகையாக நிர்வஹிப்பர்கள். அஞ்சனமே, நீலமே! என்று இரண்டு விளியாகப் பிரித்தல், அஞ்சன த்ரவ்யத்தின் நீலநிறந்தான் வடிவானவனே! என்னுதல்.

நின்ற எனதாவியை ஈர்கின்ற சீலமே!= கீழ் “வளவேழுலகின்முதலாய” என்கிற திருவாய்மொழயில் தாம் நைந்யாநுஸந்தானம் பண்ணி அகலப்புக, அப்போது கலந்து பரிமாறின சீலகுணத்தை அநுஸந்திக்கிறபடி. அல்லது, *செய்யதாமரைக் கண்ணனில் “நெஞ்சினால் நினைப்பான் யவன் அவனாகும் நீள்கடல் வண்ணனே” என்ற அர்ச்சாவதாரத்தின் நீர்மையை அநுஸந்திக்கிறபடியாகவுமாம்.

இப்படி அழகும் குணங்களுமுண்டானாலும் பெறுமிடத்தில் இன்னகால மென்றில்லை யோவென்ன, சென்றுசெல்லாதன முன்னிலாங்காலமே! என்கிறார். பூதகாலம் பஷ்யத்காலம் வர்த்தமாநகாலம் என்றுள்ள காலமும் நீயிட்ட வழக்கன்றோ என்றபடி மஹாபாரதத்தில் (உத்யோகபர்வத்தில்) திருதராஷ்ட்ரனை நோக்கி ஸஞ்ஜயன் கூறுகிறான்- “காலசக்ரம் ஜகசக்ரம் யுகசக்ரம் ச கேசவ:; ஆத்மயோகேந பகவாந் பரிவர்த்தயதே அநிசம்” இத்யாதி

உன்னை எந்நாள் கண்டுகொள்வனே?= “பூர்ணே சதுர்த்தசே வர்ஷே” என்று பரதாழ்வானுக்கு நாளிட்டுக் கொடுத்தாப்போலே எனக்கும் ஒருநாள் குறிப்பிட வேணுமென்கிறார்.

 

English Translation

O My Lord of beautiful lotus eyes, and a hue dark as collyrium, O Good one breaking my heart! O Bearer of the past, present and future! When, O when will I see you to my fil?

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top