(3204)
ஆவியே. ஆரமுதே என்னை ஆளுடை,
தூவியம் புள்ளுடை யாய்! சுடர் நேமியாய்!
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பல காலும்,
கூவியும் காணப் பெறேனுன கோலமே.
பதவுரை
|
ஆவியே |
– |
என் உயிராயிருப்பவனே! |
|
ஆர் அமுதே! |
– |
அருமையான அமுதம் போன்றவனே! |
|
என்னை ஆள் உடை |
– |
என்னை அடிமை கொண்ட |
|
அம் தூவி புள உடையாய் |
– |
அழகிய சிறகுள்ள கருத்மானை வாகனமாக வுடையவனே! |
|
சுடர் நேமியாய் |
– |
ஒளிமிக்க திருவாழியையுடையவனே! |
|
உனகோலம் |
– |
உனது வடிவழகை |
|
பாவியேன் |
– |
பாவியாகிய நான் |
|
நெஞ்சம் புலம்ப பலகாலும் கூவியும் |
– |
மனம் துடிக்கப் பலகால் கூப்பிட்டும் |
|
காணப்பெறேன் |
– |
கண்டு அநுபவிக்கப்பெற்றிலேன் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- மஹாபாபியாகையாலே நெஞ்சின் விடாய் தீர்க்கவும் பெற்றிலேனான நான் நெடுநாள் கூப்பிட்டவிடத்திலும் உன்னுடையவழகு காணவும் பெற்றிலேன் என்கிறார். அதாவது- கரணங்களையொழியத் தம்முடைய இழவு சொல்லுகிறபடி- “ப்ரஜைகளின் இழவும் பசியும் சொன்னார் கீழ்; தமிமிழவும் பசியும் சொல்லுகிறார் மேல்” என்பது ஈடு.
உயிரைவிட்டுப் பிரிந்து தரித்திருக்கவொண்ணுமோ? உயிர்க்கும் உயிரான உன்னைவிட்டு எங்ஙனே தரித்திருக்க வல்லேன் என்கிறார் ஆவியே! என்றதனால், உயிராயிருப்பதோடு கூடபோக்யதையும் அளவற்றிருப்பதனால் தரிக்கமுடியாமையை ஆரமுதே! என்பதனால் தெரிவிக்கிறார்.
என்னையாளுடை என்பதைப் புள்ளுடையானுக்கும், அடைமொழியாக்கலாம், புள்ளுக்கும் அடைமொழியாக்கலாம். பகவத் விஷயத்தில் அடிமையிற்காட்டிலும் பாகவத விஷயத்தில் அடிமையே சிறக்குமாதலால் புள்ளுக்கு அடைமொழியாக்குதல் சிறக்குமென்க. சுடர் நேமியாய்!- போக்யதைக்கும் விரோதி நிரஸநத்திற்கும் அமைந்த திருவாழியை யுடையவனே! என்றபடி.
பாவியேன் நெஞ்சம் = நெஞ்சு பகவத்விஷயத்தில் ஈடுபடாதிருந்தால் இழக்க வேண்டுமே யல்லது ஈடுபட்ட பின்பும் இழக்கக் காரணமில்லை; “லாபஸ் தேஷாம் ஜயஸ் தேஷாம் குதஸ் தேஷாம் பராபவ, யேஷாமிந்தீவரச்யாமோ ஹ்ருதயே ஸுப்ரதிஷ்டிதா” என்கிறபடியே இழவு வரமாட்டாது; அப்படியிருக்க என்நெஞ்சு இழவுபட்டிருப்பதானது, அது எனக்குக் காரணமாகப் பெற்ற பாவத்தினாலேபோலும் என்கிறார். புலம்ப = நெஞ்சானது காணப்பெறாத இழவோடே கூப்பிடுகிறபடி. “நேரே கடிக்கமலத்துள்ளிருந்துங் காண்கிலான், கண்ணனடிக் கமலந்தன்னை அயன்” என்னுமாபோலே * நெஞ்சத்துப்பேராது நிற்கும் பெருமானையன்றோ நெஞ்சு காணப்பெறாமல் கூப்பிடுகின்றது. பலகாலும்= ஒரு கால் கூப்பிட்டாலும் இழக்க வேண்டாத விஷயத்தில் பலகால் கூப்பிட வேண்டியதாயிற்று; அப்படிப் பலகால் கூப்பிட்டும் உன்கோலம் காணப்பேறேன். என்னுடைய ஸ்வரூபத்தை யிழந்தும் பெறுபெற்றிலேன் என்கை. ‘அவனறானகவே வந்து அருள்செய்தபோது செய்திடுக’ என்றுகொண்டு கூவாதேயிருக்கவேண்டுவது ஸ்வஸ்ரூபம்; ஆற்றாமையினாலே கூவினேனாதலால் ஸ்வரூபஹாநிபெற்றேன்; ஆயினும் பேறுபெற்றதில்லையே! என வருந்துகிறபடி.
இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்திகள் பரமபோக்யங்கள்; – “ஒன்று அபிமதம் பெற்றேனால்லேன், ஸ்வரூபம் பெற்றேனல்லேன் என்கிறார். “தத் தஸ்ய ஸத்ருசம் பவேத்” என்றநிருக்கப் பெற்றேனல்லேன், மடலூர்ந்தார் பெற்ற பேற்றைப் பெற்றேனல்லேன். என் ஸ்வரூபத்தையுமழித்தேன், அவன் ஸ்வரூபத்தையுமழித்தேன். அவன் நீர்மையையுமழிநத்தேன். என் சேஷத்வத்தையுமழித்தேன். அவனீச்வரத்வத்தையுமழித்தேன். என்னுடைய ஈசிதத்வமும் போயிற்று. இனிக்கொள்ள விருக்கிறாரார்? கொடுக்கவிருக்கிறாரார்? (உனகோலமே) இரண்டு தலைமையுமழித்துப் பெற வேண்டும் விஷயவைலக்ஷண்யம் சொல்லுகிறது. வ்யதிரேகத்தில் கண்ணுறங்குதல் சூது சதுரங்கங்களோடே போதுபோக்குதல் செய்யலாம் விஷயமாகப் பெற்றேனோ? *உண்டோ கண்கள் துஞ்சுதல்* என்றும் * என்னினைந்து போக்குவரிப்போது என்றும் கண்ணு முறங்காதே போது போக்கவுமரிதாயிறேயிருப்பது.”
English Translation
O My Master, Ambrosia for my soul! I call you forever with grief in my heart. O Lord of radiant discus, come riding to me on your Garuda bird. Alas, wicked me! You do not show your beautiful.
