(3132)
முந்நீர் ஞாலம் படைத்தவெம் முகில்வண்ணனே,
அந்நாள்நீ தந்த ஆக்கையின் வழியுழல்வேன்,
வெந்நாள்நோய் வீய வி னைகளைவேர் அறப்பாய்ந்து,
எந்நாள்யான் உன்னை இனிவந்து கூடுவனே?
பதவுரை
|
முந்நீர் ஞாலம் படைத்த |
– |
கடல் சூழ்ந்த இவ்வுலகை ஸ்ருஷ்டித்தவனும் |
|
எம் முகில் வண்ணனே |
– |
மேகத்தின் நன்மைபோன்ற தன்மையை யுடையவனுமான எம்பெருமானே! |
|
அ நாள் |
– |
அந்த ஸ்ருஷ்டி ஸமயத்தில் |
|
நீ தந்த |
– |
நீ கொடுத்தருளின |
|
ஆக்கையின் |
– |
சரீரத்தினுடைய |
|
வழி |
– |
வழியிலேயே |
|
உழல்வேன் |
– |
நடந்துகேட்டுத் திரிகின்றேன் |
|
வெம்நாள் |
– |
(உணர்ச்சி யுண்டான பின்பு) பரிதாபமயமான நாளிலே |
|
நோய் வீய |
– |
வியாதிகள் தீரும்படி |
|
வினைகளை |
– |
கரும பந்தங்களை |
|
வேர் அறுபாய்ந்து |
– |
வேர்ப்பற்றோடே அறுத்து தொலைக்கப்பெற்று |
|
யான் |
– |
அடியேன் |
|
உன்னை |
– |
(மஹோபகாரனான) உன்னை |
|
இனி எந்நாள் வந்து கூடுவன் |
– |
அடையப் பெறுவது இனி என்றைக்கோ! |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- உன்னை யடிபணிந்து உய்வதற்காக நீ தந்தருளின சரீரத்தைக்கொண்டு உன்னைப் பணியாமல் அவ்வுடலின் வழியே யொழிகி அநர்த்தப்பட்டேன்; நான் உன்னை என்று ஸேவிக்கப் பெறுவது என்று ஆர்ந்தராய்க் கூப்பிடுகிறார்.
எம்முகில் வண்ணனே: = எம்பெருமான் உலகங்களைப் படைத்ததெல்லாம் ஆழ்வார் தமக்காகவே யென்று கொண்டிருக்கின்றமை எம் என்பதனால் தொனிக்கும். முகிலுக்கும் எம்பெருமானுக்கும் ஸாம்யம் நிறத்தினால் மாத்திரமன்று; தன்மைகள் பலவற்றாலுங் காண்க.
பின்னடிகளின் கருத்து:- உன்னைப் பிரிந்து தரிக்க கில்லாமல் செல்லுகிற நாளில், பிரிந்து நோவுபடுகைக்கீடான பாவங்களை வேரறுத்து உன்னடி சேர்ந்து உய்வது
English Translation
O cloud-hued Lord, you made the Earth and Ocean! This body you have me then drags on painfully, O, when will I cut my Karmas by the root, when end this wretched life and join you?
