(3132)

(3132)

முந்நீர் ஞாலம் படைத்தவெம் முகில்வண்ணனே,

அந்நாள்நீ தந்த ஆக்கையின் வழியுழல்வேன்,

வெந்நாள்நோய் வீய வி னைகளைவேர் அறப்பாய்ந்து,

எந்நாள்யான் உன்னை இனிவந்து கூடுவனே?

 

பதவுரை

முந்நீர் ஞாலம் படைத்த

–

கடல் சூழ்ந்த இவ்வுலகை ஸ்ருஷ்டித்தவனும்

எம் முகில் வண்ணனே

–

மேகத்தின் நன்மைபோன்ற தன்மையை யுடையவனுமான எம்பெருமானே!

அ நாள்

–

அந்த ஸ்ருஷ்டி ஸமயத்தில்

நீ தந்த

–

நீ கொடுத்தருளின

ஆக்கையின்

–

சரீரத்தினுடைய

வழி

–

வழியிலேயே

உழல்வேன்

–

நடந்துகேட்டுத் திரிகின்றேன்

வெம்நாள்

–

(உணர்ச்சி யுண்டான பின்பு) பரிதாபமயமான நாளிலே

நோய் வீய

–

வியாதிகள் தீரும்படி

வினைகளை

–

கரும பந்தங்களை

வேர் அறுபாய்ந்து

–

வேர்ப்பற்றோடே அறுத்து தொலைக்கப்பெற்று

யான்

–

அடியேன்

உன்னை

–

(மஹோபகாரனான) உன்னை

இனி எந்நாள் வந்து கூடுவன்

–

அடையப் பெறுவது இனி என்றைக்கோ!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  உன்னை யடிபணிந்து உய்வதற்காக நீ தந்தருளின சரீரத்தைக்கொண்டு உன்னைப் பணியாமல் அவ்வுடலின் வழியே யொழிகி அநர்த்தப்பட்டேன்; நான் உன்னை என்று ஸேவிக்கப் பெறுவது என்று ஆர்ந்தராய்க் கூப்பிடுகிறார்.

எம்முகில் வண்ணனே: = எம்பெருமான் உலகங்களைப் படைத்ததெல்லாம் ஆழ்வார் தமக்காகவே யென்று கொண்டிருக்கின்றமை எம் என்பதனால் தொனிக்கும். முகிலுக்கும் எம்பெருமானுக்கும் ஸாம்யம் நிறத்தினால் மாத்திரமன்று; தன்மைகள் பலவற்றாலுங் காண்க.

பின்னடிகளின் கருத்து:- உன்னைப் பிரிந்து தரிக்க கில்லாமல் செல்லுகிற நாளில், பிரிந்து நோவுபடுகைக்கீடான பாவங்களை வேரறுத்து உன்னடி சேர்ந்து உய்வது

 

English Translation

O cloud-hued Lord, you made the Earth and Ocean!  This body you have me then drags on painfully, O, when will I cut my Karmas by the root, when end this wretched life and join you?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top