(3131)

(3131)

வியப்பாய வியப்பில்லா மெய்ஞ்ஞான வேதியனை,

சயப்புகழார் பலர்வாழும் தடங்குருகூர் சடகோபன்,

துயக்கின்றித் தொழுதுரைத்த ஆயிரத்து ளிப்பத்தும்,

உயக்கொண்டு பிறப்பறுக்கும் ஒலிமுந்நீர் ஞாலத்தே.

 

பதவுரை

வியப்பு ஆய

(அந்யத்ர) ஆச்சர்யகரமானவை

வியப்பு இல்லா

(தன்னிடத்து) ஆச்சர்யகரமாகக் பெறாதவனும்

மெய் ஞானம் வேதியனை

(மெய்யுணர்வுக்கிடமான வேதங்களால் பேசப்படுபவனுமான பெருமானை,

சயம் புகழார் பலர் வாழும்

ஜயசீலமான புகழையுடைய பல நல்லார் நவிலுமிடமான

தடம் குருகூர்

பெரிய திருநகரிக்குத் தலைவரான

சடகோபன்

ஆழ்வார்

தொழுது

ஸேவித்து

துயக்கு இன்றி

அவத்ய மொன்று மின்றியே

உரைத்த

அருளிச்செய்த

ஆயிரத்துள்

ஆயிரத்தினுள்ளே

இ பத்தும்

இத்திருவாய்மொழி

ஒலி முந்நீர் ஞாலத்து

ஒலிமிக்க கடல்சூழ்ந்த நிலவுலகததில்

உய கொண்டு

(உள்ள ஸம்ஸாரிகளை) உஜ்ஜீவனப்படுததி

பிறப்பு அறுக்கும்

ஸம்ஸார ஸம்பந்த மற்றவர்களாக்கும்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வியப்பாய வியப்பில்லா = வேறொரிடத்திலே கண்டால் ஆச்சரியப்படத்தக்கவையெல்லாம் இங்கே கண்டால் ‘இது என்ன ஆச்சரியம்’ என்று உபேக்ஷிக்கும்படியாயிருக்குமென்க. உலகத்தில் ஒருவனுக்கு நாலு பசுக்கள் கொடுத்தானென்றால் அது ஆச்சரியப்படத்தக்கதாயிருக்கும்; பெருமாள் ஒருவனுக்குப் பதினாயிரம் பிசுக்கள் கொடுத்தாரென்றாலும் ஆச்சரியப்படுதற்கு விஷயமில்லையே. ஸ்ரீராமாயண- அயோத்யா காண்டத்தில் முப்பத்திரண்டாம் ஸர்க்கத்திற் கூறப்பட்டுள்ள த்ரிஜட வ்ருத்தாந்தம் இங்கு ஸ்மரிக்கத்தக்கதாகும்.

மெய்ஞ்ஞான வேதியனை = உள்ளது உள்ளபடியே பிரதிபாதிக்குமதான வேதத்தினால் போற்றப்படுபவன் என்க. சாயப்புகழார் = ஜயம் என்ற வடசொல் சயமெனத் திரிந்தது; ஸம்ஸாரத்தை வென்று அதனால் புகழ்பெற்றவர்கள் (விரக்தர்கள்) பலர் வாழுமிடமாம் திருக்குருகூர்.

துயக்கு இன்றித் தொழுது உரைத்த ஆயிரம்- எந்த அர்தத்திலும் ஸந்தேஹவுணர்ச்சியும் விபரீத வுணர்ச்சியு மின்றிக்கே ஸகலார்த்தங்களையும் ப்ரத்யக்ஷீகரித்துப் பேசின ஆயிரம். அதில் இப்பதிகம் கடல்சூழ்ந்த மண்ணுலகில் அஸத்கல்பராக வுள்ளவர்களை உஜ்ஜீவிப்பித்து ஸம்ஸாரஸம்பந்த மற்றவர்களாக்கும் என்றாராயிற்று.

உயக்கொண்டு- உய்யக்கொண்டு

 

English Translation

This decad of the perfect thousand sons by Satakopan of Kurugur, -where godly men reside, -addresses the wonder-Lord extolled by the Vedas, Those who can sing it will break the cords of rebirth and secure heaven.

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top