(3113)
கருமவன்பாசம் கழித்துழன்றுய்யவே
பெருமலையெடுத்தான் பீடுறை கோயில்
வருமழைதவழும் மாலிருஞ்சோலை
திருமலையதுவே அடைவதுதிறமே
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஒருவர்க்கும் எளிதில் கழித்துக்கொள்ள முடியாத கரும பந்தங்களைக் கழிப்பதற்கும், அவை கழிந்து அடிமை செய்து வாழுகைக்குமாகவே எம்பெருமான் ஸந்நிதி பண்ணியிருக்கிற திருமலையை யடைவதே தகுதியென்கிறார். முதலடியில் உய்ய என்கிற வினையெச்சம் (இரண்டாமடியில்) உறை என்ற வினையைக் கொண்டு முடியும்.
பீடுறை – பீடு தோற்ற உறையுமிடம், பீடுடனே உறையுமிடம் என விரிக்க பீடு –பெருமேன்மை.
வருமழைதவழும் – இங்கு ‘மழைதவழும்‘ என்பதே போதுமாயிருக்க, வரு என்ற அடைமொழி கொடுத்த ஸ்வாரஸ்யத்தை நம்பிள்ளை காட்டியருளுகிறார் காண்மின் – “ஊருக்கு இரண்டாயிற்று மழை, நின்றவிடத்திலே நின்று வர்ஷிப்பதொரு மேகமும், போவது வருவதாயிருப்பதொருமேகமும்“ என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி.
English Translation
The Lord who lifted the mountain lives gracefully in malirumsolai, shower rain clouds pass knealing low. He breaks the cords of Karmas, so join him.
