(3112)
பயனல்லசெய்து பயனில்லை நெஞ்சே *
புயல்மழைவண்ணர் புரிந்துறைகோயில் *
மயல்மிகுபொழில்சூழ் மாலிருஞ்சோலை *
அயன்மலையடைவது அதுகருமமே.
பதவுரை
|
நெஞ்சே |
– |
மனமே!, |
|
புயல் மழை வண்ணர் |
– |
வர்ஷாகாலத்து மேகம் போன்ற திருநிறத்தையுடைய பெருமான் |
|
புரிந்து |
– |
விரும்பி |
|
உறை |
– |
நித்யவாஸம் செய்கிற |
|
கோயில் |
– |
ஸந்நிதியாய், |
|
மயல்மிகு பொழில் சூழ் |
– |
(கண்டவர்களை) மயக்குகிற சக்திமிகுந்த சோலைகளால் சூழப்பட்ட |
|
மாலிருஞ் சோலை |
– |
திருமாலிருஞ் சோலையினுடைய |
|
அயல் |
– |
அருகிலுள்ள |
|
மலை |
– |
மலையை |
|
அடைவது அது |
– |
அடைவதும் கருமமே ஸ்ரீஉத்தேச்யந்தான் |
|
பயன் அல்ல செய்து |
– |
நிஷ்பலமான காரியங்களைச் செய்வதனால் |
|
பயன் இல்லை |
– |
லாபமில்லை |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- திருமலையைத் தொழவேணுமென்பதுகூட அவசியமன்று, திருமலையோடு ஸம்பந்தமுள்ள (அதன் அருகிலுள்ள) ஒரு மலையைத் தொழுதாலும் போதும், என்கிறது இப்பாட்டு.
பரமபதத்திலிருக்கிற இருப்பையும் மற்றுமுள்ள அவதாரங்களையும் சிந்திப்பதனால் பயனொன்று மில்லையென்பது முதலடியின் உட்கருத்து. பயனல்ல என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகை. நிஷ்ப்பலமானவற்றை என்றபடி. சுவர்க்கம்
English Translation
Futile are these karmas too, O Heart! Go by the temple of Malirumsolai hill where the cloud-hued Lord resides in grace surrounded by enchanting groves.
