(3111)
சதிரிளமடவார் தாழ்ச்சியை மதியாது,
அதிர்க்குரல்சங்கத் தழகர்தம்கோயில்,
மதிதவழ்குடுமி மாலிருஞ்சோலை,
பதியதுவேத்தி யெழுவதுபயனே.
பதவுரை
|
சதிர் |
– |
அழகு பொருந்திய |
|
இள மடவார் |
– |
இளம் பருவத்துப்பெண்களிடத்து |
|
தாழ்ச்சியை |
– |
ஆழய்காற்படுவதை |
|
மதியாது |
– |
ஒரு பொருளாக நினையாமல் |
|
அதிர்குரல் சங்கத்து |
– |
முழங்குகின்ற ஓகையையுடைய சங்கு ஒலிக்கப்பெற்ற |
|
அழகர் தம் கோயில் |
– |
அழகருடைய ஆலயமாய் |
|
மதி தவழ் குடுமி |
– |
சந்திரன் உலாவப்பெற்ற சிகரத்தை யுடைத்தான |
|
மாலிருஞ்சோலை; |
– |
(என்கிற) |
|
பதி அது |
– |
அந்தத் திருப்பதியை |
|
ஏத்தி |
– |
துதித்து |
|
எழுவதே |
– |
உய்வதே |
|
பயன் |
– |
புருஷார்த்தம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
மதிதவழ்குடுமி என்றதையும் ஆழ்வான் அந்த ச்லோகத்திலேயே “சசதரரிங் கணாட்யசிகம்“ என்று மொழி பெயர்த்திருகின்றமை காண்க.
மாலிருஞ் சோலைப்பதி – மாலிருஞ் சோலையாகிற பதி என்றும், மாலிருஞ் சோலையிலுள்ள பகவந்மத்திரம் என்றும் கொள்ளலாம்.
English Translation
Ignoring the sweet calls of young maidens, it is wise to rise and worship the thundering discus-Lord of Malirumsolai, in his temple kissed by the Moon.
