(3103)
சிறப்பில்வீடு சுவர்க்கம் நரகம்,
இறப்பிலெய்துக வெய்தற்க, யானும்
பிறப்பில் பல்பிறவிப் பெருமானை,
மறப்பொன்றின்றி யென்றும் மகிழ்வேனே.
பதவுரை
|
இறப்பில் |
– |
மரணமான பிறகு |
|
சிறப்பில் வீடு |
– |
சிறப்புடன் கூடிய மோக்ஷத்தையோ |
|
சுவர்க்கம் |
– |
ஸ்வர்க்கத்தையோ |
|
நரகம் |
– |
நரகத்தையோ |
|
எய்துக |
– |
அடைவேனாக |
|
எய்தற்க |
– |
அடையாதொழிவேனாக |
|
பிறப்பு இல் |
– |
(நம்மைப்போலே கருமமடியாகப் பிறவாதவனும்) |
|
பல் பிறவி |
– |
அநுக்ரஹ மடியாகப்) பல பிறவி பிறக்கின்றவனுமான ஸ்வாமியை |
|
மறப்பு ஒன்று இன்றி |
– |
சிறிதும் மறவாமல் |
|
என்றும் |
– |
எக்காலத்திலும் (சிந்தித்து) |
|
யானும் மகிழ்வேன் |
– |
(நீசனான) நானும் களிப்புறுவேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தேஹமே ஆத்மாவாக இருக்கட்டும் அன்றி தேஹத்திற்காட்டில் வேறுபட்டிருப்பானொருவன் ஆத்மாவாக இருக்கட்டும் ஸ்வர்க்கம் நரகம் முதலானவற்றில் எது கிடைத்தாலும் கிடைக்கட்டும் இவற்றிலெல்லாம் எனக்கொரு நிர்ப்பந்தமில்லை; பின்னை எதில் நிர்ப்பந்த மென்னில் தேவரீர் கரமங்காரணமான பிறப்பு அல்லாதவராயிருந்து வைத்து ஆச்ரித ரக்ஷணார்த்தமாகப் பல பிறவிகளிலும் பிறந்தருள்பவராயிராநின்றீரே; அந்த அவதாரங்களையும் ஸகல திவ்ய சேஷ்டிதங்களையும் மறவாதே, என்றும் அநுபவிக்கப் பெறுவேனாகவேணும் ஈதொன்றிலேயே எனக்கு நிர்ப்பந்தம் என்கிறார்.
சிறப்பில் வீடு- ‘சிறப்பு இல்லாத வீடு’ என்று பொருளன்று; “ஆன்ந்தமாகிற நன்மையிலேயான மோக்ஷம்” என்பது பன்னீராயிரம். எய்தற்க-எதிர்மறை வியங்கோள் வினைமுற்று.
‘மகிழ்வேனே’ என்றது அநுபவிப்பேனென்றபடி; “மகிழ்ச்சி யென்றும் அநுபவமென்றும் பர்யாயம்” என்பர் நம்பிள்ளை.
English Translation
Whether or not I find liberation, whether I go to heaven or to hell on dying, I will joyously remember my birthless. Lord who came in his many forms on Earth.
