(3027)

(3027)

கருத்தில்தேவு மெல்லாப்பொருளும்,

வருத்தித்தமர்யப் பிரானையன்றி,

ஆரே திருத்தித்திண்ணிலை மூவுலகும்

தம்முள் இருத்திக்காக்கு மியல்வினரே.

 

பதவுரை

கருத்தின்

தனது ஸங்கல்பத்தினாலே

தேவும்

தேவர்களையும்

எல்லாப் பொருளும்

மற்றெல்லாப் பொருள்களையும்

வருத்தித்த

வ்ருத்தி செய்த (உண்டாக்கின)

மாயம்

ஆச்சரீரயமான சக்தி முதலியவற்றையுடைய

பிரானை அன்றி

எம்பிரானைத் தவிர்த்து

மூ உலகும்

மூவுலகங்களையும்

திண் நிலை

உறுதியான நிலைமையையுடையனவாக

திருத்தி

அமைத்து

தம் உள்

தம் நினைவுக்குள்ளே

இருத்தி

வைத்து

காக்கும்

காப்பாற்றுவதையே

இயல்வினர்

இயற்கையாகவுடையவர்

ஆர்

எவர் ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸ்ருஷ்டி கார்யத்தையும் ஸம்ரக்ஷண கார்யத்தையும் ஸ்வாதீநமாகவுடையவனாகையாலே இவனுக்கே ஈச்வரத்வம்  பொருந்துமென்கிறார்.  தனது ஸங்கல்பத்திலே தேவஜாதி முதலான ஸகல பதார்த்தங்களையும் உண்டாக்கின ஆச்சர்ய பூதனான ஸர்வேச்வரனையன்றி மூன்று லோகங்களையும் நிலைபெறுமாறு திருத்தித் தன் ஸங்கல்பத்திலே வைத்துக்கொண்டு காக்கும் ஸ்வபாவமுடையவர் வேறு யாரேனுமுளரோ? இல்லையென்றபடி.  இதனால், ‘ஸ்ருஷ்டிக்குப் பிரமன் கடவன்,  ரக்ஷணத்திற்கு மாத்திரமே எம்பெருமான் கடவன் என்பது கிடையாது; எல்லாம் எம்பெருமானதீனமே’ என்றதாம்.

 

English Translation

By his will, he made the gods and all things, He contains the three worlds and protects them, and lends them his permanence.  Who but our wonder-Lord can do this?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top