(2959)
அமுதம் அமரகட் கீந்த
நிமிர்சுட ராழி நெடுமால்
அமுதிலு மாற்ற இனியன்
நிமிர்திரை நீள்கட லானே.
பதவுரை
|
அமரர்கட்கு |
– |
தேவர்கட்கு |
|
அமுதம் ஈந்த |
– |
அமிர்தத்தைக் கொடுத்தவனாய் |
|
திமிர் சுடர் ஆழி |
– |
வளர்கின்ற ஒளியையுடைய திருச்சக்கரத்தையுடையனாய் |
|
நெடு மால் |
– |
எல்லைகடந்த பெருமையை |
|
நிமிர் திரை நீள் கடலான |
– |
அலை யெறிகின்ற விசாலமான திருப்பாற்கடலில் கண் வளர்ந்தருளி |
|
அமுதிலும் |
– |
(அக்கடலிலுண்டான) அமிர்தத்தைவிட |
|
ஆற்ற இனியன் |
– |
மிகவும் போக்யன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில்* விள்கையிள்ளாமை விரும்பி* என்று சொன்ன சொற்போக்கிலே பிரயோஜநாந்தரபரர்கள் ப்ரஸ்தாவிக்கப் பட்டமையால், ஐயோ உள்கலந்தார்க்கு ஓரமுதாயிருந்து மெம்பெருமானை விட்டுப் பிரயோஜநாந்தரபர்களாய் ஆபாஸமான அமுதத்தைப் பெற்றுக்கொண்டு விலகிப் போவாரும் சிலரே! என்று தேவர்களை நிந்திப்பதிலே நோக்காகச் சொல்லுகிறது இப்பாட்டு. ஆறாயிரப்படி யருளிச்செயல் காண்மீன்;- “அம்ருதத்திற்காட்டிலும் பரம்போக்யனாயிருந்தவனுடைய திருவாழியுங் கையுங்கண்டுவைத்தும் சிலர் அதி க்ஷுத்ரமான ப்ரயோஜநாந்தரங்களைக் கொண்டு போவதே! என்ன பாக்யஹீநரோ! என்று கொண்டு கீழ்ப்பாட்டில் ப்ரஸ்துதமான ப்ரயோ நாந்தார்த்திகளிழவை அநுஸந்தித்து இன்னாதாகிறார்” என்று.
தேவர்களின் நிந்தை இதில் ஸ்பஷ்டமாக இல்லையாயினும் “அமுதமமரர் கட்கீர்ந்த” என்று எம்பெருமானைக் கொண்டாடுவதில் அவர்களது நித்தையே உள்ளுறைவதென்க. எம்பெருமான் என்ன பரமோதாரனோ! ‘எங்களுக்கு நீ வேண்டா; சாவா மருந்து தந்தாற்போதும்’ என்றவர்களுக்கு அவர்கள் விரும்பிய பொருளையே கொடுத்துவிடுவதே! என்று கொண்டாடிச் சொல்லுகிற பாசுரம் முதலடி. அவரக்ள் கொண்ட பிரயோஜநத்தை அருவருத்து, தாம் உகந்த பரமப்ரயோஜநமான எம்பெருமானுடைய பரம போக்யதையை அநுபவிக்கிறார் மற்றையடிகளால்.
English Translation
The Lord is sweeter than ambrosia. He gave ambrosia to the gods. He reclines in the deep ocean with a radiant discus in hand.
