(2960)

(2960)

நீள்கடல் சூழிலங் கைக்கோன்

தோள்கள் தலைதுணி செய்தான்

தாள்கள் தலையில் வணங்கி

நாள்கள் தலைக்க ழிமினே.

 

பதவுரை

நீள் கடல் சூழ்

நீண்ட கடலினால் சூழப்பட்ட

இலங்கை

ஸங்காபுரிக்கு

கோன்

தலைவனாயிருந்த இராவணனுடைய

தோள்கள்

இருபது தோள்களுடையும்

தலை

பத்துத் தலைகளையும்

துணி செய் தான்

அறுத்தொழித்த ஸ்ரீராமபிரானுடைய

தாள்கள்

திருவடிகளை

தலையில் வணங்கி

தலையாலே வணங்கி

நாள் கடலை

காலாமகிய கடலை

கழியின்

தாண்டுங்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இங்ஙனம் பரமபோக்யனான எம்பெருமானுடைய குணங்களை அநுபவித்துக்கொண்டு போது போதுபோக்குவதே ப்ராப்த மென்கிறாரிதில்.

“பரந்தகடலை அழகாகவுடைத்தாய், அந்தக் கடல்தானும் மிகையாம்படியான அரணையுடைத்தாயிருந்துள்ள இலங்கைக்கு அதிபதியன்றோ நான்!’ என்று கொண்ட செருக்கினால் சக்ரவர்த்தித்திருமகனாரென்று மதியாதே எதிரிட்ட பயலுடைய தோள்களையும் தலையையும் துணிதத மனத்துக்கினிய இராமபிரானுடைய திருவடிகளைவணங்கி, (அதாவது, அனுமானைப்போலே அவனுடைய வீர சரிதங்களைக் கொண்டு போதுபோக்கி) ஸம்ஸார நிலத்திலிருக்கும்வரையில் கடல் போலே பெருகிச் செல்லுகின்ற தாள்களைத் தொலையுங்கோள் என்றாராயிற்று.

ஈற்றடியில், ‘நாட்கடலை’ என்ற ஸ்தானத்தில் ‘நாழ்க்கடலை’ என்றும் பாட முண்டாதலால், நாழ் என்று பாபமாய், பாபமாகிற கடலைக் கழியுங்கோள் என்றபடியாகவுமாம்.

 

English Translation

The Lord is sweeter than ambrosia.  He gave ambrosia to the gods. He reclines in the deep ocean with a radiant discus in hand.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top