(2958)
கொள்கைகொ ளாமையி லாதான்
எள்கலி ராகமி லாதான்
விள்கைவிள் ளாமைவி ரும்பி
உள்கலந் தார்க்கோ ரமுதே.
பதவுரை
|
கொள்கை |
– |
குணம்பார்த்துக் கொள்ளுதலும் |
|
கொளாமை |
– |
குணமில்லாமை பார்த்துத் தள்ளுதலும் |
|
இலாதான் |
– |
இல்லாதவனாய் |
|
எள்கல் |
– |
கைவிடுகைக்கு அடியான மனநெகிழ்ச்சியும் |
|
இராகம் |
– |
கைக்கொள்ளுதற்கு அடியான ஆசையும் |
|
இலாதான் |
– |
இல்லாதவனாய் |
|
விள்கை |
– |
வேறு பிரயோஜனங்களைக் கொண்டு விலகிப் போவதையும் |
|
விள்ளாமை |
– |
தன்னையே விரும்பி விடாதிருப்பதையும் |
|
விரும்பி |
– |
எதிர்பார்த்து |
|
உள் கலந்தார்க்கு |
– |
(விண்டுபோகாமல்) தன்னில் கலந்தவர்கட்கு |
|
ஓர் அமுது |
– |
ஒப்பற்ற அமுதமாயிருப்பன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நமக்கு ‘அநந்ய போக்யத்வம்‘ என்பதாக ஒரு ஸ்வரூபமுண்டு, அதாவது எம்பெருமானைத் தவிர்த்து மற்ற அற்ப பலன்களை விரும்பாமல் அவனையே பரம்போக்ய வஸ்துவாகக்கொண்டு அவனையே ஆசைப்படுவதாம். இப்படிப்பட்ட அதிகாரிகள் விஷயத்திலே அவன் அமுதமாகவேயிருப்பான் என்கிறது. தன்னைவந்துபணிகின்ற அதிகாரிகளைத் தான் பரீக்ஷித்துப்பார்ப்பன், இவரகள் ஏதேனும் க்ஷுத்ரபலன்களைப்பெற்றுக்கொண்டு போய்விடுவார்களா? அல்லது அவற்றில் நசையற்று நம்மையே பரமப்ரயோஜநமாகப் பற்றுகிறவர்காள? என்று பார்ப்பன், அகன்று போகிறவர்களாயிருந்தால், க்ஷுத்ரபலன்களைத்தந்து அவர்களை அகற்றிவிடுவன், அங்ஙனல்லாதவர்களுக்குத்தானே முற்றூட்டாக இருப்பன்.
கீழே “ஈடுமெடுப்புமிசீலன்“ என்றதற்கும் இங்கு “கொள்கை கொளாமையிலாதான்“ என்பதற்கும் என்ன வாசியென்னில், அடியவர்களில் ஏற்றத்தாழ்வு பாராதே ஆசையுடையாரெல்லாரையும் அடிமைப்படுத்திக்கொள்ளு மியல்வினன் என்பது அந்தப் பாசுரத்திற்கு விவக்ஷிதம், அப்படி அடிமைப்படுத்திக்கொள்ளுமளவில் சிலரிடத்தே உயர்த்தி கண்டு அவர்களை அந்தரங்க கைங்கரியத்திலே ஏவிகொள்ளுதல் சிலரிடத்து தாழ்வு கண்டு அவர்களை பஹிரங்க கைங்கரியத்திலே ஏவிக்கொள்ளுதல் என்னும்படியான வாசிவையாதவன் என்பது இவ்விடத்திற்கு விவக்ஷிதம் –என்று பிள்ளான் ஆறாயிரத்திலே பணித்தபடி.
என்கல் இராகமிலாதான் – எள்கலாவது உபேக்ஷ, இராகமாவது அபேக்ஷை, இவையிரண்டுமில்லாதவன், கைங்கரியங்கொள்ளுகிற விஷயத்தில் வாசிவையாமை மாத்திரமன்று, திருவுள்ளத்திலேயே உபேக்ஷயும் அபேக்ஷையுமில்லாதவன் என்றவாறு. இங்கே நம்பிள்ளையோடு, “திருவுள்ளத்தாலே சிலரை இகழ்ந்திருத்தல் சிலரை ஆதரித்தல் செய்யான், *ஈடுமெடுப்புமிலீசன்* என்றவிடம் ஸ்வீகார ஸமயத்தில் குணதோஷங்கள் பாரானென்றது, இங்கு பரிமாற்றத்தில் தரமிட்டுக்கொள்ளனென்கை.
வின்கைவிள்ளாமைவிரும்பு உள்கலந்தார்க்கு ஓரமுது = எம்பெருமான் பார்ப்பது இவ்வளவே; ‘இவர்கள் பிரயோஜநாந்தரங்களை விரும்பிப் பெற்றுக் கொண்டு நம்மை விட்டு ஓடிப் போகிறவர்களா? அன்றி நம்மையே விரும்பி விடாதிருப்பவர்களா? என்கிற இவ்வளவையே ஆராய்ந்து பார்த்து, தன்னையே பிரயோஜனமாகப்பற்றித் தன்னுடனே ஒரு நீராகக் கலக்க விரும்பியிருப்பவர்களுக்கு* அப்பொழுதைக்கப்பொழுது என்னாராவமுதமே* என்னும்படியாயிருப்பன்.
பகவத்கீதையில், “தேஷாம் ஸததயுக்தாநாம்” என்றவிடத்தில் , ‘எப்போதும் தன்னோடு கூடியிருப்பவர்களுக்கு’ என்பது பொருளாயிருக்கச்செய்தேயும் (ஆசம்ஸாயாம் க்தப்ரத்யயமாகக்கொண்டு) ‘எப்போதும் தன்னோடு கூடியிருக்க விரும்பியிருக்குமவர்களுக்கு என்று ஸ்ரீபாஷ்யக்காரர் பொருள் பணித்தபடியே இங்கும் உள்கலந்தார்க்கு என்பதற்கு ‘உள்கலக்க விரும்பியிருக்குமவர்கட்கு’ எனப் பொருள் கொள்ளுதல் பொருந்தும்.
English Translation
The Lord is neidier attracted, not repelled, displays neither hatred nor friendship. Pleased by abstinence and steady devotion, he is ambrosia to the devotees.
