(2957)
அணங்கென ஆடுமெ னங்கம்
வணங்கி வழிபடு மீசன்
பிணங்கி யமரர் பிதற்றும்
குணங்கெழு கொள்கையி னானே.
பதவுரை
|
ஆணங்கு என ஆடும் |
– |
தைவாவேசங் கொண்டாற்போல ஆடுகின்ற |
|
என் அங்கம் |
– |
எனது சரீரம் |
|
வணங்கி வழிபடும் |
– |
சேவித்து ஆராதிக்கும்படி நின்ற |
|
ஈசன் |
– |
எம்பெருமான் (எப்படிப்பட்டவனெற்றால் |
|
அமரர் |
– |
நித்தியஸூரிகள் |
|
பிணங்கி |
– |
பரஸ்பரவிவாத் செய்து |
|
பிதற்றும் |
– |
பிதற்றும்படியாயுள்ள |
|
குணம் கெழு |
– |
பல திருக்குணங்கள் பொருத்திய |
|
கொள்கையினான் |
– |
கோட்பாட்டை யுடையவன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப்பாட்டுக்கு இரண்டு வகையாக அந்வயக்ரமமுண்டு; (பதவுரையின்படியே) பாசுரத்தை உள்ளபடியே அந்வயித்துப் பொருள்கொள்வது ஒன்று; பிணங்கியமரர் பிதற்றுங்குணங்கெழு கொள்கையினான ஈசனை. அணங்கென ஆடும் என்அங்கம் வணங்கி வழிபடும் என்று கொள்வது மன்றென்று. இப்பொருளில், ஈசன் என்றது இரண்டாம் வேற்றுமைத் தொகை.
தம்முடைய மனமொழி மெய்களுக்கு எம்பெருமான் பக்கலிலுண்டான ஊற்றம் சிறிதுபோது உண்டாய்விடுகையன்றியே நித்யஸூரிகளுக்குப்போலே நிரந்தர யாத்ர்ரையானபடி சொல்லுகிறது இப்பாட்டு.
(பிணங்கியித்யாதி) எம்பெருமானது குணங்களிலே புகுந்துவிட்டால் ஒவ்வொரு குணத்தினுடைய அதிசயமும் எல்லைகாண வொண்ணாததாயிருக்கும்; பரத்வத்திற்கு ஈடான குணங்களும், ஸௌலப்யத்திற்கு ஈடான குணங்களுமாக வகுக்கப்பட்டுள்ள குணங்களிலே ஒருவர் ஒரு குணத்தை அநுபவித்து அதன் அருமைபெருமைகளைச் சொல்லிக்கொண்டாட, மற்றொருவர் மற்றுமொரு குணத்தையனுபவித்து அதன் அருமைபெருமைகளை யெடுத்துரைத்துக் கொண்டாட, இங்ஙனே வாதவிவாதகலஹங்கள் ஏற்பட்டுவிடும்.
English Translation
My body dances like a ghoul, worships and serves the Lord, repository of all virtues, that celestials argue and rave about!
