(2898)
அங்கயல் பாய்வயல் தென்னரங் கன், அணி ஆகமன்னும்
பங்கய மாமலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தியெல்லாம்
தங்கிய தென்னத் தழைத்துநெஞ்சே! நந் தலைமிசையே
பொங்கிய கீர்த்தி இராமா னுசனடிப் பூமன்னவே.
பதவுரை
|
நெஞ்சே |
– |
ஓ மனமே! |
|
பக்தி எல்லாம் தங்கியது என்ன தழைத்து |
– |
பக்தியெல்லாம் நம்மிடத்திலே குடிகொண்ட தென்று சொல்லும்படியாக வீறுபெற்று, |
|
பொங்கிய கீர்த்தி இராமாநுசன் அடி பூ |
– |
பரந்த புகழை யுடையரான எம்பெருமானாருடைய திருவடித் தாமரைகள் |
|
நம் தலைமிசையே மன்ன |
– |
நமது தலைமேலே நித்ய வாஸம் பண்ணும்படியாக, |
|
(நாம் செய்ய வேண்டிய காரியம் என்னவென்றால்) |
||
|
அம் கயல் பாய் வயல் தென் அரங்கன் |
– |
அழகிய கயல் மீன்கள் பாய்கிற கழனிகள் சூழ்ந்த தென்னரங்கத்தில் உறையும் பெருமானாடைய |
|
அணி ஆகம் மன்னும் |
– |
அழகிய திருமார்பிலே நித்யவாஸம் பண்ணுகிறவளாய் |
|
பங்கயம் மா மலர் பாவையை |
– |
சிறந்த தாமரைப் பூவில் பிறந்தபதுமை போன்றவளான ஸ்ரீ மஹாலக்ஷ்மியை |
|
போற்றதும் |
– |
வாழ்த்துவோம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப்பிரபந்தத்தின் தொடக்கத்தில் “இராமாநுசன் சரணாவிந்தம் நாம் மன்னிவாழ” என்று எம்பெருமானாருடைய திருவடித்தாமரைகளைப் பொருந்திவாழ்வதே தமக்குப் பரம புருஷார்த்தமாக அருளிச் செய்தவராகையாலே அந்தப் புருஷார்த்தம் நமக்கு யாவஜ்ஜீவம் ஹித்திக்கும்படியாக -எல்லாச் செல்வங்களையும் அளிக்கவல்ல பெரிய பிராட்டியாரைப் பிரார்த்திப்போமென்கிறார்-முடிவான இப்பாட்டில். ஸாமாந்ய ஸம்பத்தை அளிக்கவல்ல பிராட்டியே இந்த விசேஷ ஸம்பத்தையும் அளிக்கக் கடவுள் என்றதாயிற்று.
English Translation
I saw in my eyes the dark gem-hued Lord, resplendent with the war-waging discus and conch. He came as a manikin then and strode the Earth with great feet, O. How he grew and became worshipped by the seven worlds!
