(2894)
கையிற் கனியென்னக் கண்ணனைக் காட்டித் தரிலும்,உன்றன்
மெய்யிற் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்,நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதிவிண் சேரிலும் இவ்வருள்நீ
செய்யில் தரிப்பன் இராமானுச! என் செழுங்கொண்டலே!
பதவுரை
|
செழு கொண்டல் |
– |
ஔதார்யத்தில்) விலக்ஷணமான மேகம் போன்ற |
|
என் இராமாநுச |
– |
எம்பெருமானாரே! |
|
(தேவரீர்) |
||
|
கண்ணனை |
– |
எம்பெருமானை |
|
கையில் கனி என்ன |
– |
உள்ளங்கை நெல்லிக் கனிபோலே |
|
காட்டி தரினாம் |
– |
காட்டிக் கொடுத்தாலும் |
|
உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றியான் வேண்டிலன் |
– |
தேவரீருடைய திருமேனியில் விளங்குகிற ஸௌந்தரியமும் முதலிய குணங்களைத் தவிர வேறொன்றிலும் நான் கண்வைக்கமாட்டேன்; |
|
நிரயம் தொய்யில் |
– |
ஸம்ஸார நரகக்குழியில் |
|
கிடக்கிலும் |
– |
அழுந்திக் கிடந்தேனாகிலும் |
|
சோதி விண் சேரிலும் |
– |
சோதிமயமான பரம பதத்தை அடைந்தேனாகிலும் |
|
இவ் அருள் |
– |
(தேவரீருடைய திரு மேனியழகை அநுபவித்திருக்கைக்கு உறுப்பான) கிருபையை |
|
நீ செய்யில் |
– |
தேவரீர் செய்தருளினால் தான் |
|
தரிப்பான் |
– |
(ஸம்ஸாரத்திலோ மோக்ஷத்திலோ) கால் பாவிநிற்பேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நிரயத்தொய்யில் = நிரயமாவது நரகம். இந்த ஸம்ஸாரநிலமே நரகமெனப்படும். தொய்யில்-சேறு. ஏழனாருபு தொக்கி யிருக்கிறது. தொய்யல் என்பாருமுளர்.
English Translation
O Ramanuja! My ripe rain-cloud! Even if you give me Krishna like a fruit in my hands, I still seek the glory that flows from your frame only, Whether I fall into the dungeon of hell or whether I attain the glorious high heaven, you must give me this, or else I shall not live.
