(2856)
ஞானம் கனிந்த நலங்கொண்டு நாடொரும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வி னை யேன்மனத்தில்
ஈனம் கடிந்த இராமா னுசன் தன்னை எய்தினர்க்குத்
தானம் கொடுப்பது தன்தக வென்னும் சரண்கொடுத்தே.
பதவுரை
|
மாதவன் |
– |
திருமால் |
|
வானம் கொடுப்பது |
– |
மோக்ஷம் அளிப்பது |
|
(எப்படிப்பட்டவர்களுக்கு கென்றால்) |
||
|
ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள்தொறும் நைபவர்க்கு |
– |
ஞானம் பக்திரூபமாகப் பரீபக்வமாகி அந்த பக்தியினால் நித்யம் உருகுகிறவர்களுக்கேயாம்; |
|
வல் வினையேன் மனத்தில் ஈனம் கடிந்த இராமாநுசன் |
– |
மஹாபாபியான எனது ஹ்ருதயத்திலிருறந்த கல்மஷங்களைப் போக்கடித்த எம்பெருமானார் |
|
தன்னை எய்தினர்க்கு |
– |
தம்மைப் பற்றினவர்களுக்கு |
|
அத்தானம் கொடுப்பது |
– |
அந்த மோக்ஷ ஸ்தானத்தை அளிப்பது |
|
(எவ்விதமாக வென்றால்) |
– |
|
|
தன் தகவு என்னும் சரன் கொடுத்து |
– |
தம்முடைய க்ருபையாகிற ஸாதனத்தை (அவர்களுக்குக் கைம்முதலாகக் கொடுத்து (தமது திவ்ய க்ருபையாலே) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அடியார்களுக்கு மோக்ஷமளிக்கிற அதிகாரம் எம்பெருமானாக்குமுண்டு, எம்பெருமானார்க்கு முண்டு. எம்பெருமான் அளிப்பது மிகவும் ச்ரமப்படுத்தியே; எம்பெருமானார் அளிப்பது கேவலம் தம்முடைய திருவருளாலே என்கிறார் இதில்.
ஞானமாது நன்றாகக் கனிந்து அது பக்தி பரமபக்தி பரமபக்தி என்னும்படியான அவஸ்தை களையடைந்து, அதனால் இந்த ஸம்ஸாரத்தில் க்ஷணகால மிருப்பதும் அஸஹ்யமாய் ஆழ்வார்களைப்போல “{ஒரு பகலாயிணரமூழியாலோ’ என்று துடிப்பவர்களுக்குத்தான்; எம்பெருமான் முக்தியளிப்பது; எம்பெருமானாரோ வென்னில் –
க்ருபாமாத்ரப்ரஸந்நாசார்யராகையாலே அடியார்களிடத்தில் எவ்விதமான க்லேசத்தையும் எதிர்பாராமல் தமது திருவருளைக் கொண்டே அவர்களைக் கயரயேற்றுவர் என்றதாயிற்று.
வல்வினையேன் மனத்திலீனங்கடிந்த என்பதற்கு – மாதவனை அடிபணிந்து வருந்துகையாகிற ஈனத்தை எனக்குத் தவிர்த்த எம்பெருமானார் என்று உரைக்கவுமாம்.
English Translation
For those who offer worship everyday with a heart mellowed by knowledge the Lord Madavan grants the sky world of Maksha. Ramanuja, who remvoed the inadequacies of my heart, gives that same position to those who approach him, through compassion for the refuge-seekers.
