(2845)

(2845)

கண்டவர் சிந்தை கவரும் கடிபொழில் தென்னரங்கன்

தொண்டர் குலாவும் இராமா னுசனைத், தொகையிறந்த

பண்டரு வேதங்கள் பார்மேல் நிலவிடப் பார்த்தருளும்

கொண்டலை மேவித் தொழும், குடி யாமெங்கள் கோக்குலமே.

 

பதவுரை

தொகை இறந்த

–

கணக்கில்லாத

பண்தரு வேதங்கள்

–

ஸ்வரப்ரதாநங்களான வேதங்கள்

பார்  மேல்

–

இப்பூமியிலே

நிலவிட

–

ஒங்கி வளரும்படி

பார்சதருளும்

–

செய்தருளினவரும்

கொண்டலை

–

பரம உதாரரும்,

கண்டவர் சிந்தைகவரும்

–

கணடவர்களின் நெஞ்சைக் கவாகின்ற

கடி பொழில்

–

மணமிக்க சோலைகள் சூழ்ந்த

தென் அரங்கன்

–

தென்னரங்கத்திற்குத் தலைவரான பெரிய பெருமாளுக்கு அடிமைப்பட்ட ஸ்ரீ வைஷ்ணவர்களால்

குலாவும்

–

கொண்டாடப்படுபவருமான

இராமாநுசனை

–

எம்பெருமானாரை

மேலி கொழும் குடி

–

பொருந்தி ஆச்ரயிக்கிற குலம்

எங்கள் கோக்குலம் ஆம்

–

எங்களுக்கு ஸ்வாமியாகக் கூடியகுலமாம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானாரை அடிபணிந்து உஜ்ஜீவிக்கும் மஹான்கள் தாம் அடியேனை ஆள்வற்கு உரியவர்கள் என்றாராயிற்று ஸ்ரீ ராமாநுஜ பக்தர்களுக்கு அடியேன் தாஸனாயிருப்பேன் என்றாவது

இராமாநுனை மேவித் தொழுங்குடி எங்கள் கோக்குலமாம் ஸ்ரீ எம்பெருமானாரன்று எமக்கு ஸ்வாமி; அவரை ஆச்ரயிப்பவர்களே எமக்கு ஸ்வாமிகள்.

கோ என்பதற்கு மேன்மையென்றும் பொருள் உண்டாதலால், எங்கள் கோக்குலம் – எங்களுடைய மேன்மையான குலம் (எப்படிப்பட்டதென்றால்), இராமாநுசனை மேவித் தொழுங்குடியாம் -, என்பதாகவும் உரைக்கலாம். “எங்கள்கோக் குடியே” என்றும் பாடமுண்டு; பொருள் ஒன்றே.

 

English Translation

The devotees of the Lord of Southern Arangam, -surrounded by attractive fragrant groves, -rejoiced in singing the praise of Ramanuja who established the singing tradition of the Tamil Vedas.  Those who worship him as their benevolent raincloud are our hereditary masters!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top