(2846)
கோக்குல மன்னரை மூவெழுகால், ஒரு கூர்மழுவால்
போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனமெங்கும்
ஆக்கிய கீர்த்தி இராமா னுசனை அடைந்தபின், என்
வாக்குரை யாது, என் மனம்நினை யாதினி மற்றொன்றையே.
பதவுரை
|
கோக்குலம் மன்னரை |
– |
க்ஷத்திரிய குலத்து அரசர்களை |
|
மூ எழு கால் |
– |
இருபத்தொரு தலைமுறையளவும் |
|
ஒரு கூர் மழுவால் |
– |
கூர்மை பொருந்திய ஒரு மழுவாலே |
|
போக்கிய |
– |
(பரசுராமாவதாரத்தில்) தொலைத்தருளின |
|
தேவனை |
– |
எம்பெருமானை |
|
போற்றம் |
– |
துதிக்கின்ற |
|
புனிதன் |
– |
பரமபரிசுத்தரும், |
|
புவனம் எங்கும் ஆக்கிய கீர்த்தி |
– |
உலகமெங்கும்பரவின புகழை யுடையவருமான |
|
இராமாநுசனை |
– |
எம்பெருமானாரை |
|
அடைந்த பின் |
– |
ஆச்ரயித்த பின்பு |
|
இனி |
– |
மேலுள்ள காலமெல்லாம் |
|
மற்று ஒன்றை |
– |
வேறு எந்த விஷயத்தையும் |
|
என் வாக்கு |
– |
எனது வாக்கானது |
|
உரையாது |
– |
சொல்லமாட்டாது; |
|
என் மனம் |
– |
எனது மனமும் |
|
நினையாது |
– |
நினைக்கமாட்டாது. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அடைந்ததற்பின் வாக்குரையாது என்மனம் நினையாது” என்றும் பாடமுண்டாம்.
English Translation
Our sacred teacher Ramanuja, revered the world over, worshipped the feet of the lord who wielded his battleaxe the feet of the lord who wielded his battleaxe and destroyed twenty one mighty kings. Having attained him, my heart does not think of anyone else. My lips do not speak of anyone else.
