(2840)
உதிப்பன வுத்தமர் சிந்தையுள் ஒன்னலர் நெஞ்சமஞ்சிக்
கொதித்திட மாறி நடப்பன கொள்ளைவன் குற்றமெல்லாம்
பதித்தவென் புன்கவிப் பாவினம் பூண்டன பாவுதொல்சீர்
எதித்தலை நாதன் இராமா னுசன்றன் இணையடியே.
பதவுரை
|
பரவு தொல் சீர் |
– |
உலகமெங்கும் பரவின நித்ய கலயாணகுணங்களை யுடையவரும் |
|
எதி தலை நாதன் |
– |
யதிகளுக்குத் தலையான காயகருமான |
|
இராமாநுசன் தன் |
– |
எம்பெருமானாருடைய |
|
இணை அடி |
– |
திருவடியிணைகள் |
|
(எப்படிப்பட்டவை யென்றால்) |
||
|
உத்தமர் சிந்தையுள் உதிப்பன |
– |
உத்தமாதிகாரிகளுடைய திருவுள்ளங்களிலே ப்ரகாசிப்பவை; |
|
ஒன்னலர் நெஞ்சம் |
– |
பிரதிபக்ஷிகளுடைய நெஞ்சானது |
|
அஞ்சி கொதித்திட |
– |
பயப்பட்டுப் பரீதவிக்கும்படி |
|
மாறி நடப்பன் |
– |
மாறிமாறியிட்டு நடக்குந்தன்மையுடையன; |
|
கொள்ளை வன் குற்றம் எல்லாம் பதித்த |
– |
அபாரமான வலிய தோஷங்கள் யாவும் அழுந்திக்கிடக்கிற |
|
என் புன் கவி |
– |
என்னுடைய க்ஷுத்ரமான கவனமாகிய |
|
பா இனம் பூண்டன |
– |
பாசுரங்களைப் (ஸ்தோத்ரமாகாப்) பெற்றுக் கொண்டவை. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தமக்குப் பரமப்ராப்யமான எம்பெருமானார் திருவடிகளை வருணிக்கிறார் இதில் வடுக நம்பிபோல்வாரான உத்தமாதிகாரிகளாலே இடைவிடாது சிந்திக்கப்படுவன; பிரதிபக்ஷிகளுடைய நெஞ்சிலே பரீதாபத்தை உண்டுபண்ணுவன; பல்வகைக் குற்றங்கள் நிறைந்த எனது கவிகளையும் எற்வாறுக் கொள்வன – அத்திருவடிகள், என்றாராயிற்று.
ஒன்னவர் நெஞ்ச மஞ்சிக் கொதித்திட மாறி நடப்பன – பாஹ்யகுக்ருஷ்டிகளை நிரஸிப்பதற்காதப் பலபிடங்களிலும் ஸஞ்சரித்தருளினமை அறிக. மாறிநடத்தல் – ஒரு அழகானநடை. நம்பெருமாள் நடைபோலே.
English Translation
The lotus feet of our lord Ramanuja, king among ascetics of lasting world-fame, are like dawn in the thoughts of the good ones. They boldly frudge int he hearts, of enemies, striking terror. They are receptacles for my inferior poetry, full of flows.
