(2840)

(2840)

உதிப்பன வுத்தமர் சிந்தையுள் ஒன்னலர் நெஞ்சமஞ்சிக்

கொதித்திட மாறி நடப்பன கொள்ளைவன் குற்றமெல்லாம்

பதித்தவென் புன்கவிப் பாவினம் பூண்டன பாவுதொல்சீர்

எதித்தலை நாதன் இராமா னுசன்றன் இணையடியே.

 

பதவுரை

பரவு தொல் சீர்

உலகமெங்கும் பரவின நித்ய கலயாணகுணங்களை யுடையவரும்

எதி தலை நாதன்

யதிகளுக்குத் தலையான காயகருமான

இராமாநுசன் தன்

எம்பெருமானாருடைய

இணை அடி

திருவடியிணைகள்

(எப்படிப்பட்டவை யென்றால்)

உத்தமர் சிந்தையுள் உதிப்பன

உத்தமாதிகாரிகளுடைய திருவுள்ளங்களிலே ப்ரகாசிப்பவை;

ஒன்னலர் நெஞ்சம்

பிரதிபக்ஷிகளுடைய நெஞ்சானது

அஞ்சி கொதித்திட

பயப்பட்டுப் பரீதவிக்கும்படி

மாறி நடப்பன்

மாறிமாறியிட்டு நடக்குந்தன்மையுடையன;

கொள்ளை வன்  குற்றம் எல்லாம் பதித்த

அபாரமான வலிய தோஷங்கள் யாவும் அழுந்திக்கிடக்கிற

என் புன் கவி

என்னுடைய க்ஷுத்ரமான  கவனமாகிய

பா இனம் பூண்டன

பாசுரங்களைப் (ஸ்தோத்ரமாகாப்) பெற்றுக் கொண்டவை.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-    தமக்குப் பரமப்ராப்யமான எம்பெருமானார் திருவடிகளை வருணிக்கிறார் இதில் வடுக நம்பிபோல்வாரான உத்தமாதிகாரிகளாலே இடைவிடாது சிந்திக்கப்படுவன; பிரதிபக்ஷிகளுடைய நெஞ்சிலே பரீதாபத்தை உண்டுபண்ணுவன; பல்வகைக் குற்றங்கள் நிறைந்த எனது கவிகளையும் எற்வாறுக் கொள்வன – அத்திருவடிகள், என்றாராயிற்று.

ஒன்னவர் நெஞ்ச மஞ்சிக் கொதித்திட மாறி நடப்பன – பாஹ்யகுக்ருஷ்டிகளை நிரஸிப்பதற்காதப் பலபிடங்களிலும் ஸஞ்சரித்தருளினமை அறிக. மாறிநடத்தல் – ஒரு அழகானநடை. நம்பெருமாள் நடைபோலே.

 

English Translation

The lotus feet of our lord Ramanuja, king among ascetics of lasting world-fame, are like dawn in the thoughts of the good ones. They boldly frudge int he hearts, of enemies, striking terror. They are receptacles for my inferior poetry, full of flows.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top