(2839)
ஆனது செம்மை அறநெறி பொய்ம்மை அறுசமயம்
போனது பொன்றி யிறந்தது வெங்கலி பூங்கமலத்
தேனதி பாய்வயல் தென்னரங் கன்கழல் சென்னிவைத்துத்
தானதில் மன்னும் இராமா னுசனித் தலத்துதித்தே.
பதவுரை
|
பூ கமலம் தேன் |
– |
தாமரைப் பூக்களிலுண்டான மகரந்தமானது |
|
நதி பாய் |
– |
ஆறாகப் பெருகப் பெற்ற |
|
வயல் |
– |
கழனிகளையுடைய |
|
தென் அரங்கன் |
– |
ஸ்ரீரங்கத்திலே எழுந்தருளியிருக்கிற பெரிய பெருமாளுடைய |
|
கழல் |
– |
திருவடிகளை |
|
சென்னி வைத்து |
– |
சிரஸாவஹித்துக் கொண்டு |
|
தான் அதில் மன்னும் |
– |
தாம் அத்திருவடிகளிலேயே ப்ரவணாயிருக்கிற |
|
இராமாநுசன் |
– |
எம்பெருமானார் |
|
இ தலத்து உதித்து |
– |
இப்பூமியிலே திருவவதரித்ததனால் |
|
செம்மை அறம் நெறி |
– |
ருஜூவான தர்மமார்க்கமானது |
|
ஆனது |
– |
ஸத்தை பெற்றது; |
|
பொய்ம்மை அறு சமயம் |
– |
பொய்யே நிறைந்து கிடக்கிற அறுசமயங்களும் |
|
பொன்றி போனது |
– |
நாசமடைந்தன; |
|
வெம் கலி இறந்தது |
– |
கொடிய கலியுகமும் மாண்டது |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமானார் திருவவதரித்தனாலே இவ்வுலகத்துக்கு உண்டான நன்மைகளை அருளிச் செய்கிறார் இதில். முன்பு குச்ருஷ்டிகளினால் அழிந்துகிடந்த தர்மமார்க்கம் மீண்டு நிலைபெற்றது; சாஸ்த்ரவிருத்தமான புறமதங்களெல்லாம் தலை சாய்ந்தன; கலிதோஷமும் கெட்டுப்போயிற்று.
English Translation
The Southern Arangam is surrounded by fields and rivers of nectar flowing from lotus blossoms. Our Ramanuja placed the lord Ranga’s feet on his head and himself at Ranga’s feet. After Ramanuja’s birth on this Earth, the path of righteousness has been established, the heretic six schools of thought have been erased, the terrible kali vanquished.
