(2838)
நிகரின்றி நின்றவென் நீசதைக்கு நின்னரு ளின்கணன்றிப்
புகலொன்று மில்லை அருட்குமஃ தேபுகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமானுச! இனி நாம்பழுதே
அகலும் பொருளென், பயனிரு வோமுக்கு மானபின்னே?
பதவுரை
|
புன்மையிலோர் பருகம் பெருமை இராமாநுச |
– |
மஹான்கள் பேச வேண்டும்படியான பெருமையையுடைய எம்பெருமானாரே! |
|
நிகர்இன்றி நின்ற என்நீசதைக்கு |
– |
என்னுடைய ஒப்பற்ற தாழ்மைக்கு |
|
நின் அருளின் கண் அன்றி |
– |
தேவரீருடைய க்ருபையினிடத்தில் தவிர |
|
புகல் ஒன்றும் இல்லை |
– |
வேறு எவ்விடத்திலும் ஒதுங்க இடமில்லை |
|
அருட்கும் |
– |
தேவரீருடைய அந்த க்ருபைக்கும் |
|
அஃதே புகல் |
– |
(என் போல்வாருடைய) அந்தத்தாழ்மையே சரணம்; (ஆக இவ்வகையாலே) |
|
இருவோமுக்கும் பயன் ஆனபின் |
– |
அடியேனால் தேவரீருக்குப்பயன், அடியேனுக்குப் பயன் என்று ஸித்தமான பின்பு |
|
இனி |
– |
இனி மேலும் |
|
பழுதே |
– |
வியர்த்தமான |
|
அகலும் பொருள் என்ன |
– |
பிரிந்திருக்கைக்குக் காரணம் என்ன? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “எனக்காரும் நிகரில்லையே” என்று களித்துக்கூறின அமுதனாரை நோக்கி எம்பெருமானார் “இக்களிப்பு உமக்கு எத்தனை நாளைக்கு நிற்கும்? நான் உம்மை விட்டுவிடவுங் கூடும்; நீர் என்னை விட்டுவிடவுங்கூடும், இரண்டத் தொன்று நேர்ந்தால் இக்களிப்பு மாறக்கூடாது தானே” என்ன -; இனி நாம் வீணுக விட்டுப் பிரிவதற்குக் காரணமேயில்லை யென்கிறார்.
(“ததஹம் த்வத்ருதேந நாதவாந் மத்ருதே த்வம் தயநீயவாந் நச-விதிநிர்மிதமேதத்ந்வயம் பகவந் பாலய மாஸ்மஜீஹப:”) என்ற ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்ந ச்லோகமும் இப்பொருள் கொண்டதே.
அருட்கும் அஃதே புகல் = நீசர்கள் விஷயத்தில் க்ருபை பண்ணினாலன்றோ அருள்விளங்குவதும் பயன் பெறுவதும்.
English Translation
O Ramanuja praised by faultless ones! My incomparable lowliness has not refuge but your grace. Your grace too can flow nowhere except into me. When the two thus find their mutual fruition, is if not futile to separate them?
