(2837)

(2837)

இறைஞ்சப் படும்பரன் ஈசன் அரங்கனென்று இவ்வுலகத்

தறம்செப்பும் அண்ணல் இராமானுசன்,என்அருவினையின்

திறம்செற்றிரவும் பகலும் விடாதென்றன் சிந்தையுள்ளே

நிறைந்தொப் பறவிருந்தான், எனக் காரும் நிகரில்லையே!

 

பதவுரை

இறைஞ்சப்படும் பரன் ஈசன் அரங்கன் என்று

‘எல்லாராலும் வணங்கத்தக்க பரதெய்வம் (எது வென்றால்) ஈசனாகிய ஸ்ரீரங்க நாதனேயாம்’ என்று

இ உலகத்து

இப்பூமண்டலத்திலே

அறம் செப்பும்

ஸாக்ஷாத் தாமத்தை அருளிச் செய்யுமவராய்

அண்ணல்

ஸர்வஸ்வாமியான

இராமாநுசன்

எம்பெருமானார்

என் அரு வினையின் திறம் செற்று

என்னுடைய போக்க முடியாத கர்மஸமூஹத்தைப் போக்கி

பகலும் இரவும்விடாது

ஸர்வ காலத்திலும்

என் தன் சிந்தை

என் ஹ்ருதயத்தினாள்ளே

நிறைந்து

பரிபூர்ணராகி

ஒப்பு அற இருந்தான்

(இவ்விருப்புக்கு) ஒப்பில்லாதபடி எழுந்தருளியிருக்கிறார்;

எனக்கு

இப்படிப்பட்ட அருளைப்பெற்ற  எனக்கு

ஆரும் நிகர்இல்லை

ஒப்பாவார் ஆருமில்லை.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-   ஸ்ரீரங்கநாதனே எல்லாரும் வணங்கத்தக்க பரதெய்வமென்னும் உண்மையை உலகத்தார்க்கு உபதேசிந்து எல்லாரையும் பகவத் ஸமாச்ரயணத்தில் ருசியடையவர்களாக்கிப் போருகின்ற எம்பெருமானார் என்னுடைய தீவினைகளை வேரோடே களைந்தொழித்து அநவரதமும் எனது ஹருதயத்தினாள்ளே பரிபூர்ணராயெழுந்தருளிராநின்றார்; இப்படிப்பட்ட பரமபாக்கியம் பெற்றவன் இவ்வுலகில் நானொருவனேயாகையால் – இல்லை யெனக் கெதிரில்லை யெனக் கெதிரே.

 

English Translation

Our masterly Ramanuja convinced the world that the lord Ranganatha is the only one worthy of worship as the lor of Universe Breaking through my strong Karmas, he entered my heart night and day as one without a peer, Now who in the world can match me?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top