(2836)
கூறும் சமயங்கள் ஆறும் குலையக் குவலயத்தே
மாறன் பணித்த மரையுணர்ந் தோனை மதியிலியேன்
தேறும் படியென் மனம்புதுந் தானைத் திசையனைத்தும்
ஏறும் குணனை இராமா னுசனை இறைஞ்சினமே.
பதவுரை
|
கூறும் சமயங்கள் ஆறும் குலைய |
– |
மனம்போனபடி சொல்லிக் கொண்டிருக்கிற ஆறு ப்ரஹ்யமதங்களும் தலைமடங்கும்படி |
|
குவலயத்தே |
– |
இப்பூமண்டலத்திலே |
|
மாறன் பணித்த மறை |
– |
நம்மாழ்வார் அருளிச்செய்த தமிழ் வேதத்தை |
|
உணர்ந்தோனை |
– |
கற்று அறிந்தவராயும் |
|
மதியிலியேன் தேறும்படி |
– |
ஜ்ஞாநஹீகனான நானாம் தெளியும்படியாக |
|
என் மனம் புகுந்தானை |
– |
என் ஹ்ருதயத்தலே வந்து புகுந்தவராயும் |
|
திசை அனைத்தும் எறும் குணனை |
– |
எல்லாத் திக்குக்களிலும் பரவிய திருக்குணங்களையுடையவராயுமிருக்கிற |
|
இராமாநுசனை |
– |
எம்பெருமானாரை |
|
இறைஞ்சினம் |
– |
வணங்கினொம். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமானார் செய்தருளின அரிய பெரிய உபகாரங்கள் நெஞ்சில் ஊற ஊற, பரவசராய்த் திருவடிகளிலே வணங்குகிறார்:- உலகத்தில் பிரமாணமில்லாமலும் யுக்தியில்லாமலும் மனம் போனபடி சொல்லிக்கொண்டு திரிகிற மத’ ந்தரஸ்தர்களையெல்லாம் பங்கப்படுத்துவதற்காக நம்மாழ்வார் அருளிச் செய்த தமிழ்வேதமானது திருவாய்மொழியை ஒதியுணர்ந்தவரும், அவிவேகியான நான்கூடத் கேறுதலடையும்படி என் நெஞ்சினுள்ளே புகுந்து என் ஸக்தையை நோக்குபவரும், திசைகளெங்கும் பரவிய புகழையுடையருமான எம்பெருமானாரை வணங்கினொமென்றாராயிற்று.
சமயங்கள் ஆறும் = தேஹாத்மவாதி; தேஹபரீணுமாத்மவதி, விஜ்ஞாநத்மவாதி, சூந்யவாதி, அத்வைதவாதி, சிவபரத்வவாதி என்றிப்படி ஆறுமதஸ்தர்களுண்டு. வேறு வகைகளும் உண்டு எல்லாமதங்களும் திருவாய் மொழியில நெற்; செய்யப் புல்தேயுங்கணக்கிலே தொலைக்கப்பட்டனவென்க. குவலயம் – வடசொல், தோறும்படி – ‘ஒரு வழியாலும் நாம் உஜ்ஜீவிக்க வகையில்லையே! என்செய்வோம், என்று கடுமாறிக்கிடந்த நானாம் ‘இனி நமக்கொரு குறையுமில்லை’ என்று தேறி மார்விலே கைவைத் துறங்குபடியாக என்கை.
English Translation
We praise the world-famous Ramanuja who gave us the Sri-Bashyam. He realised the message in Maran Satakopan’s Tamil Veda, and put on end to the controversies in the six schools of orthodoxy. He entered my lowly heart and clarified my thoughts as well.
