(2835)

(2835)

பேறொன்று மற்றில்லை நின்சரண் அன்றி,அப்பேறளித்தற்

காறொன்று மில்லைமற் றச்சரண் அன்றி,என்றிப்பொருளைத்

தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத்தந்த செம்மைசொல்லால்

கூறும் பரமன்று இராமானுச! மெய்ம்மை கூறிடிலே.

 

பதவுரை

இராமாநுச

எம்பெருமானாரே!

நின் சரண் அன்றி

தேவரீருடைய திருவடிகளைத்தவிர

மற்று பேறு ஒன்றும் இல்லை

உபேயம் வேறொன்று மில்லை;

அப்பேறு அளித்தற்கு

தேவரீர்  திருவடிகளாகிற அந்த உபேயத்தைத் தருவதற்கு

அச்சரண் அன்றி

அத்திருவடிகள் தவிர

மற்று ஆறு ஒன்றும் இல்லை

வேறு உபாயம் ஒன்று மில்லை;

என்ற இப்பொருளை

என்கிற இவ்வுண்மைப் பொருளை

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-   உபாயமும் உபேயமும் எம்பெருமானார் திருவடிகளே’ என்றிருக்கும் மஹான்களுக்கும் தேவரீர் எவ்வாறு அருள் புரிகின்றதோ அவ்வாறாகவே சிறிதும் வாசிவையாமல் பாவியேனுக்கும் அருள் புரிகின்றதே! இஃது என்ன பெருங்குணம்!! த்ருடவிச்வாஸ முடைய ஆழ்வான் ஆண்டான் போல்வாரை அடிமைகொள்வது போலவே அவிச்வாஸியான என்னையும் அடிமை கொள்வதே! இச்செம்மைக் குணத்தின் பெருமையைப் பாசுரமிட்டுச் சொல்ல எனக்கு சக்தியில்லையே யென்று தடுமாறுகின்றார்.

 

English Translation

Ramanuja! There is no greater purpose than attaining your feet, and there is no way to attain it save the grace of your feet alone.  Those who understood this have received your grace in such great measure as you have given to me today.  How much, is beyond my words!

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top