(2827)
படிகொண்ட கீர்த்தி இராமா யணமென்னும் பத்திவெள்ளம்
குடிகொண்ட கோயில் இராமா னுசன்குணங் கூறும்,அன்பர்
கடிகொண்ட மாமாலர்த் தாள்கலந் துள்ளங் கனியும்நல்லோர்
அடிகண்டு கொண்டுகந்து என்னையும் ஆளவர்க் காக்கினரே.
பதவுரை
|
படிகொண்ட கீர்த்தி |
– |
உலக மெங்கும் பரந்த புகழை யுடைத்தான |
|
இராமாயணம் என்னும் |
– |
ஸ்ரீ ராமாயண மென்கின்ற |
|
பக்தி வெள்ளம் |
– |
பக்தி ஸமுத்திரம் |
|
குடிகொண்ட கோயில் |
– |
நித்யவாஸம் பண்ணுகிற திவ்ய ஸ்தாநமாயிருக்கின்ற |
|
இராமாநுசன் |
– |
எம்பெருமானாருடைய |
|
குணம் கூறும் அன்பர் |
– |
திருக்குணங்களைப் பேசுகின்ற பக்திமான்களுடைய |
|
கடிகொண்ட மா தாள் மலர் |
– |
மணம்மிக்குச் சிறந்த பாதாரவிந்தங்களில் |
|
உள்ளம் கலந்து |
– |
நெஞ்சு பொருந்தி |
|
கனியும் |
– |
ஸ்நேஹித்திருக்கின்ற |
|
நல்லோர் |
– |
மஹாநுபவர்கள் |
|
அடிகண்டு கொண்டு |
– |
(இவ்வாதம் வஸ்துவானது உடையவர்க்கு சேஷப்பட்ட தென்கிற) மூலப்பொருளைத் தெரிந்து கொண்டு |
|
உகந்து |
– |
ஆதரித்து |
|
என்னையும் |
– |
அடியேனையும் |
|
அவர்க்கு |
– |
அவ்வெம்பெருமானார்க்கு |
|
ஆள் ஆக்கினர் |
– |
ஆட்படுத்தினார்கள் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப்படிப்பட்ட எம்பெருமானாரை நீரே சென்று பற்றினீரோ? அன்றி அவர் தாமே ஸ்வீகரித்தருளினாரே? என்று அமுதனாரைச் சிலர் கேட்க, நானாம் பற்றவில்லை, அவரும் ஸவீகரிக்க வில்லை; அவருடைய ஸம்பந்த ஸம்பந்திகள் என்னைக் கொண்டு சேர்த்தார்கள் என்கிறார்.
அடி கண்டு கொண்டு = அடியாவது மூலம்; எம்பெருமானார்க்கு உரித்தாயிருக்கையாகிற மூலத்தைத் தெரிந்து கொண்டு சேர்த்தார்க் கொள்கை. மருமறிந்து காரியஞ்செய்தார்க் ளென்றவாது
English Translation
Ramanuja enshrined the world-famous Bhakti-surging Ramayana in his heart, His praise worthy devotee kurattalvan and feet-worshipping heart-melting good sage Parasara Bhattar saw some sing of hope in my lowly self and took me into their service.
