(2827)

(2827)

படிகொண்ட கீர்த்தி இராமா யணமென்னும் பத்திவெள்ளம்

குடிகொண்ட கோயில் இராமா னுசன்குணங் கூறும்,அன்பர்

கடிகொண்ட மாமாலர்த் தாள்கலந் துள்ளங் கனியும்நல்லோர்

அடிகண்டு கொண்டுகந்து என்னையும் ஆளவர்க் காக்கினரே.

 

பதவுரை

படிகொண்ட கீர்த்தி

–

உலக மெங்கும் பரந்த புகழை யுடைத்தான

இராமாயணம் என்னும்

–

ஸ்ரீ ராமாயண மென்கின்ற

பக்தி வெள்ளம்

–

பக்தி ஸமுத்திரம்

குடிகொண்ட கோயில்

–

நித்யவாஸம் பண்ணுகிற திவ்ய ஸ்தாநமாயிருக்கின்ற

இராமாநுசன்

–

எம்பெருமானாருடைய

குணம் கூறும் அன்பர்

–

திருக்குணங்களைப் பேசுகின்ற பக்திமான்களுடைய

கடிகொண்ட மா தாள் மலர்

–

மணம்மிக்குச் சிறந்த பாதாரவிந்தங்களில்

உள்ளம் கலந்து

–

நெஞ்சு பொருந்தி

கனியும்

–

ஸ்நேஹித்திருக்கின்ற

நல்லோர்

–

மஹாநுபவர்கள்

அடிகண்டு கொண்டு

–

(இவ்வாதம் வஸ்துவானது உடையவர்க்கு சேஷப்பட்ட தென்கிற) மூலப்பொருளைத் தெரிந்து  கொண்டு

உகந்து

–

ஆதரித்து

என்னையும்

–

அடியேனையும்

அவர்க்கு

–

அவ்வெம்பெருமானார்க்கு

ஆள் ஆக்கினர்

–

ஆட்படுத்தினார்கள்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  இப்படிப்பட்ட எம்பெருமானாரை நீரே சென்று பற்றினீரோ? அன்றி அவர் தாமே  ஸ்வீகரித்தருளினாரே? என்று அமுதனாரைச் சிலர் கேட்க, நானாம் பற்றவில்லை, அவரும் ஸவீகரிக்க வில்லை; அவருடைய ஸம்பந்த ஸம்பந்திகள் என்னைக் கொண்டு சேர்த்தார்கள் என்கிறார்.

அடி கண்டு கொண்டு = அடியாவது  மூலம்; எம்பெருமானார்க்கு  உரித்தாயிருக்கையாகிற மூலத்தைத் தெரிந்து கொண்டு சேர்த்தார்க் கொள்கை. மருமறிந்து காரியஞ்செய்தார்க் ளென்றவாது

 

English Translation

Ramanuja enshrined the world-famous Bhakti-surging Ramayana in his heart, His praise worthy devotee kurattalvan and feet-worshipping heart-melting good sage Parasara Bhattar saw some sing of hope in my lowly self and took me into their service.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top